Type Here to Get Search Results !

பத்ரேஸ்வரிபுரம் பாலூர் அரசியே... பாடல்

பத்ரேஸ்வரிபுரம் அரசியே
தனமெல்லாம் தந்திடணும் தரணி ஆள்பவளே
மனமெல்லாம் குளிரணும் மகமாயி உன் அருளாலே
போகின்ற வழியெல்லாம் பொன்னாத்தா நீயும்
போதிய ஒளிதந்து வழி நடத்தணும்
வருகின்ற வினையெல்லாம் வண்ணகிளி நீயும்
வழக்காடி நீக்கிடணும் வளம் தந்திடணும்

சக்தி சக்தி சக்திமாகாளி
முக்தி முக்தி நீயே வழி

சக்தி சக்தி சக்திமாகாளி
முக்தி முக்தி நீயே வழி

பத்ரேஸ்வரிபுரம் அரசியே
தனமெல்லாம் தந்திடணும் தரணி ஆள்பவளே
மனமெல்லாம் குளிரணும் மகமாயி உன் அருளாலே
போகின்ற வழியெல்லாம் பொன்னாத்தா நீயும்
போதிய ஒளிதந்து வழி நடத்தணும்
வருகின்ற வினையெல்லாம் வண்ணகிளி நீயும்
வழக்காடி நீக்கிடணும் வளம் தந்திடணும்

பாய்ந்து வரும் கங்கையைப் போல் பாலூரிலே
பார்வதியாள் சிரித்து வருகிறாள்
ஓய்வில்லா சூரியனைப் போல் பாலூரிலே
பத்ரேஸ்வரி அருள் புரிகிறாள்
விளைகின்ற நிலமெல்லாம் பயிராக நிற்பாள்
விளையாட காலமெல்லாம் உயிராக வருவாள்

சக்தி சக்தி சக்திமாகாளி
முக்தி முக்தி நீயே வழி

பத்ரேஸ்வரிபுரம் அரசியே
தனமெல்லாம் தந்திடணும் தரணி ஆள்பவளே
மனமெல்லாம் குளிரணும் மகமாயி உன் அருளாலே
போகின்ற வழியெல்லாம் பொன்னாத்தா நீயும்
போதிய ஒளிதந்து வழி நடத்தணும்
வருகின்ற வினையெல்லாம் வண்ணகிளி நீயும்
வழக்காடி நீக்கிடணும் வளம் தந்திடணும்

விதியால் கதியில்லாதவர்க்கு நல்ல மதி தரணும்
சதியால் வீழ்ந்தாலும் ஜோதியாய் மிளிர வேணும்
புள்ளி மான் போல் நானே
புலி போல் வரும் துயரே
நீயே காலுக்கு வேகம் தந்து கரை சேர்க்கணும்

சக்தி சக்தி சக்திமாகாளி
முக்தி முக்தி நீயே வழி

பத்ரேஸ்வரிபுரம் அரசியே
தனமெல்லாம் தந்திடணும் தரணி ஆள்பவளே
மனமெல்லாம் குளிரணும் மகமாயி உன் அருளாலே
போகின்ற வழியெல்லாம் பொன்னாத்தா நீயும்
போதிய ஒளிதந்து வழி நடத்தணும்
வருகின்ற வினையெல்லாம் வண்ணகிளி நீயும்
வழக்காடி நீக்கிடணும் வளம் தந்திடணும்

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.