Type Here to Get Search Results !

பாறையடி குலசாவின் பாதம்பணிந்தால் அரவணைப்பான்... பாடல்

குலத்தினை காத்திடும் குலசாவு
குடும்பமாய் கும்பிடுறோம் குலசாவு
பாறையடி குலசாவின் பாதம்பணிந்தால்
பால் போன்ற உள்ளத்தினால் அரவணைப்பான்

முறுக்கு மீசைக்காரன் குறுந்தடியை கொண்டு
ஆவேசமாய் வாரான் பயங்கொள்ளாதே கண்டு

ஆடட்டும் ஆடட்டும் குலசாமி
பாடட்டும் பாடட்டும் வில்லுப்பாட்டு
சாமி சாமி குலசாமி
பாறையடி பரம்பரையின் குலசாமி

ஆடட்டும் ஆடட்டும் குலசாமி
பாடட்டும் பாடட்டும் வில்லுப்பாட்டு
சாமி சாமி குலசாமி
பாறையடி பரம்பரையின் குலசாமி

கறுத்த நாடார் கருணையுடனே
கவலை போக்க வந்திடுவார்
மறுத்த வாக்கு சொல்லாமலே
மகிழ்ச்சியை வாரி தந்திடுவார்

ஆடட்டும் ஆடட்டும் குலசாமி
பாடட்டும் பாடட்டும் வில்லுப்பாட்டு
சாமி சாமி குலசாமி
பாறையடி பரம்பரையின் குலசாமி

மாயா கொண்டான் நாடாரும்
மாற்றத்தை தந்து காத்திருவாரு
மாயா வேலைகள் பலிக்காது
அவரே மாய தந்திரம் செய்திடுவாரு

ஆடட்டும் ஆடட்டும் குலசாமி
பாடட்டும் பாடட்டும் வில்லுப்பாட்டு
சாமி சாமி குலசாமி
பாறையடி பரம்பரையின் குலசாமி

இரயுமன் குட்டி நாடாரும்
இரக்கம் மிக கொண்டவரு
இரங்கி நாமும் கேட்டதெல்லாம்
இன்றே தந்து காத்திடுவாரு

ஆடட்டும் ஆடட்டும் குலசாமி
பாடட்டும் பாடட்டும் வில்லுப்பாட்டு
சாமி சாமி குலசாமி
பாறையடி பரம்பரையின் குலசாமி

பொன்னம் பெருமாள் நாடாரும்
பொன்னும் பொருளும் தந்திடுவாரு
பொல்லாத நோயை விரட்டிடவே
பொங்கி எழுந்து வந்திடுவாரு

ஆடட்டும் ஆடட்டும் குலசாமி
பாடட்டும் பாடட்டும் வில்லுப்பாட்டு
சாமி சாமி குலசாமி
பாறையடி பரம்பரையின் குலசாமி

குலத்தினை காத்திடும் குலசாவு
குடும்பமாய் கும்பிடுறோம் குலசாவு
பாறையடி குலசாவின் பாதம்பணிந்தால்
பால் போன்ற உள்ளத்தினால் அரவணைப்பான்

முறுக்கு மீசைக்காரன் குறுந்தடியை கொண்டு
ஆவேசமாய் வாரான் பயங்கொள்ளாதே கண்டு

ஆடட்டும் ஆடட்டும் குலசாமி
பாடட்டும் பாடட்டும் வில்லுப்பாட்டு
சாமி சாமி குலசாமி
பாறையடி பரம்பரையின் குலசாமி

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.