Type Here to Get Search Results !

பாறையடி பத்ரகாளி பரவசமா வாறாளே... பாடல்

பாறையடி பத்ரகாளி பரவசமா வாறாளே
பத்தர்களுக்கு வேண்டியதை பாத்து பாத்து தாறாளே
ஆடி ஆடி பத்ரகாளி ஆவேசமா வாறாளே
ஆண்டியை அரசனாக்க வாரி வாரி தாறாளே

மேனியெல்லாம் சிலுசிலுக்க மேகமெல்லாம் பயந்துநிற்க
ஆனி ஆடி மழையைப் போல வாறாளே
நம்ம எல்லோரையும் காத்து நிப்பாளே

மேனியெல்லாம் சிலுசிலுக்க மேகமெல்லாம் பயந்துநிற்க
ஆனி ஆடி மழையைப் போல வாறாளே
நம்ம எல்லோரையும் காத்து நிப்பாளே

ஆதி பராசக்தி அன்னை பராசக்தி
ஆதரிக்கும் சக்தி பாறையடி பராசக்தி

பாறையடி பத்ரகாளி பரவசமா வாறாளே
பத்தர்களுக்கு வேண்டியதை பாத்து பாத்து தாறாளே
ஆடி ஆடி பத்ரகாளி ஆவேசமா வாறாளே
ஆண்டியை அரசனாக்க வாரி வாரி தாறாளே

இரு கண்ணும் நீயம்மா இதய துடிப்பும் நீயம்மா
உரு தந்தவளும் நீயம்மா உயிரான தாயம்மா
ஊர் என்னை பாராட்ட நீ என்னை தாலாட்ட
ஊர் போற்றும் பத்ரகாளியை ஊரே சீராட்ட

வெட்டாத கிணறு தந்தாயே காளி
எட்டாத வெற்றியையும் தந்திடுவா காளி

வெட்டாத கிணறு தந்தாயே காளி
எட்டாத வெற்றியையும் தந்திடுவா காளி

பாறையடி பத்ரகாளி பரவசமா வாறாளே
பத்தர்களுக்கு வேண்டியதை பாத்து பாத்து தாறாளே
ஆடி ஆடி பத்ரகாளி ஆவேசமா வாறாளே
ஆண்டியை அரசனாக்க வாரி வாரி தாறாளே

களித்து மகிழுதம்மா என் மனமோ
நீ குளிப்பதை காணயிலே
சலிக்க வில்லையம்மா சகலகலாவல்லி
உன் ஆலயம் தினம் வருகையிலே
லோகத்தில் உன் மக்கள் எங்கிருந்தாலும்
போகத்தில் செழித்திட செய்வாயே

தண்ணியிலே எரியுதம்மா அழகான ஜோதி
எண்ணெய் இல்லா நெய்யப்பம் தந்தாயே தேவி

தண்ணியிலே எரியுதம்மா அழகான ஜோதி
எண்ணெய் இல்லா நெய்யப்பம் தந்தாயே தேவி

பாறையடி பத்ரகாளி பரவசமா வாறாளே
பத்தர்களுக்கு வேண்டியதை பாத்து பாத்து தாறாளே
ஆடி ஆடி பத்ரகாளி ஆவேசமா வாறாளே
ஆண்டியை அரசனாக்க வாரி வாரி தாறாளே

மேனியெல்லாம் சிலுசிலுக்க மேகமெல்லாம் பயந்துநிற்க
ஆனி ஆடி மழையைப் போல வாறாளே
நம்ம எல்லோரையும் காத்து நிப்பாளே

மேனியெல்லாம் சிலுசிலுக்க மேகமெல்லாம் பயந்துநிற்க
ஆனி ஆடி மழையைப் போல வாறாளே
நம்ம எல்லோரையும் காத்து நிப்பாளே

ஆதி பராசக்தி அன்னை பராசக்தி
ஆதரிக்கும் சக்தி பாறையடி பராசக்தி

ஆதி பராசக்தி அன்னை பராசக்தி
ஆதரிக்கும் சக்தி பாறையடி பராசக்தி

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.