Type Here to Get Search Results !

ஈஸ்வரி பத்ரேஸ்வரி பாலவிளை பத்ரேஸ்வரி... பாடல்

ஈஸ்வரி பத்ரேஸ்வரி பாலவிளை பத்ரேஸ்வரி
ஈஸ்வரி பத்ரேஸ்வரி பாலவிளை பத்ரேஸ்வரி

ஆயிரம் இதழ் தாமரையே உனக்கு ஆயிரம் நாமமம்மா
ஆயிரம் கண்ணுடையவளே உனக்கு நான் பாடுவேன் கீதமம்மா
சரணம் சரணம் துதிபாடவே அம்மா
வரணும் வரணும் எனை ஆளவே

சரணம் சரணம் துதிபாடவே அம்மா
வரணும் வரணும் எனை ஆளவே

வையகம் கொண்டாடும் வைகாசி திருவிழா
வையகத்தவர்களின் வைபோக பெருவிழா
ஈஸ்வரி பத்ரேஸ்வரி பாலவிளை பத்ரேஸ்வரி

புகழ்மாலை தினம் உன் கழுத்தில்
தாவி ஓடும் மனதிடத்தில்
தாலாட்டு பாடும் உன் உதட்டில்
புவிஆளும் உன் ஆலயத்தில் சரணாகதி சரணாகதி

வையகம் கொண்டாடும் வைகாசி திருவிழா
வையகத்தவர்களின் வைபோக பெருவிழா
ஈஸ்வரி பத்ரேஸ்வரி பாலவிளை பத்ரேஸ்வரி

எண்ணெயிலே எரியுதம்மா ஏகப்பட்ட ஜோதி
உன் சன்னதியிலே மாறாதம்மா ஒருநாளும் நீதி
மஞ்சள் குங்குமம் மங்கலம் வாழ்நாள் முழுதுமே
மறையாது என் வாழ்வில் நிலைக்கணுமே

வையகம் கொண்டாடும் வைகாசி திருவிழா
வையகத்தவர்களின் வைபோக பெருவிழா
ஈஸ்வரி பத்ரேஸ்வரி பாலவிளை பத்ரேஸ்வரி

தூய உள்ளம் தூங்காத கண்கள்
நான் துவண்டு போகாமல் காத்திடம்மா
உன் கடைவிழி பார்வை பாவை எனை பாரில் உயர்த்துமே
தொடக்கமும் முடிவும் இல்லா எங்கள் தொலையாத நிதியமே
தொல்லை வாழ்வில் வரும் போதெல்லாம் கரையேற்றும் விடியலே

வையகம் கொண்டாடும் வைகாசி திருவிழா
வையகத்தவர்களின் வைபோக பெருவிழா
ஈஸ்வரி பத்ரேஸ்வரி பாலவிளை பத்ரேஸ்வரி

ஆயிரம் இதழ் தாமரையே உனக்கு ஆயிரம் நாமமம்மா
ஆயிரம் கண்ணுடையவளே உனக்கு நான் பாடுவேன் கீதமம்மா
சரணம் சரணம் துதிபாடவே அம்மா
வரணும் வரணும் எனை ஆளவே

சரணம் சரணம் துதிபாடவே அம்மா
வரணும் வரணும் எனை ஆளவே

வையகம் கொண்டாடும் வைகாசி திருவிழா
வையகத்தவர்களின் வைபோக பெருவிழா
ஈஸ்வரி பத்ரேஸ்வரி பாலவிளை பத்ரேஸ்வரி

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.