Type Here to Get Search Results !

பாலவிளை ஆள்பவளே பார் போற்றும் பைரவியே… பாடல்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

பாலவிளை ஆள்பவளே
பார் போற்றும் பைரவியே
பக்தர்கள்தம் குறைதீர்க்க
சிங்கத்தின் மீதேறி
சிங்காரமாய் ஜொலிக்க…

பாய்ந்தோடி வந்திடம்மா
நீ பாய்ந்தோடி வந்திடம்மா

பாலவிளை ஆள்பவளே
பார் போற்றும் பைரவியே
பக்தர்கள்தம் குறைதீர்க்க
சிங்கத்தின் மீதேறி
சிங்காரமாய் ஜொலிக்க…

சேவிக்கும் அன்பர்களின் சிந்தையிலே புகுந்து
மஞ்சள் முகத்தவளே கேட்கும் வரமளிக்கும்
வண்ண விழியழகி கொஞ்சும் மொழியழகி

கனிந்தருள வாடியம்மா
நீ கனிந்தருள வாடியம்மா

பாலவிளை ஆள்பவளே
பார் போற்றும் பைரவியே
பக்தர்கள்தம் குறைதீர்க்க
சிங்கத்தின் மீதேறி
சிங்காரமாய் ஜொலிக்க…

செந்தூர பொட்டழகி
செம்பவழ வாய் அழகி
செந்தூரன் தாயே
செம்மைநிற ஆடைகட்டி
சேய்கள்தன் வேண்டுதலை

செவிசாய்த்து அருளிடம்மா
நீ செவிசாய்த்து அருளிடம்மா

பாலவிளை ஆள்பவளே
பார் போற்றும் பைரவியே
பக்தர்கள்தம் குறைதீர்க்க
சிங்கத்தின் மீதேறி
சிங்காரமாய் ஜொலிக்க…

பரமன்தன் பத்தினியே
பாராளும் பார்கவியே
பாலவிளை ஊர்தனிலே
தடம்பதித்த நாயகியே
பக்தர்கள்தம் குரல்கேட்டு
நேச கரம் நீட்டி

அரவணைக்க வாடியம்மா
நீ அரவணைக்க வாடியம்மா

பாலவிளை ஆள்பவளே
பார் போற்றும் பைரவியே
பக்தர்கள்தம் குறைதீர்க்க
சிங்கத்தின் மீதேறி
சிங்காரமாய் ஜொலிக்க…

வைகாசி மாதத்திலே கொடைவிழா காணும்
எங்கள் குல நாயகியே
பாலவிளை பத்ரேஸ்வரியே
பார்போற்றும் வண்ணம் நாங்கள் வாழ

பௌர்ணமியாய் வந்திடம்மா
நீ பௌர்ணமியாய் வந்திடம்மா

பாலவிளை ஆள்பவளே
பார் போற்றும் பைரவியே
பக்தர்கள்தம் குறைதீர்க்க
சிங்கத்தின் மீதேறி
சிங்காரமாய் ஜொலிக்க…

முக்திக்கு வித்தாகும் முக்கண்ணன் தலைவியே
பக்தியால் கருந்துருகி சரணடைந்த பிள்ளைகள்தன்
சோதனைகளை சாதனைகளாக மாற்றியமைக்கும்

வல்லமையை தந்திடுவாய்
நீ வல்லமையை தந்திடுவாய்

பாலவிளை ஆள்பவளே
பார் போற்றும் பைரவியே
பக்தர்கள்தம் குறைதீர்க்க
சிங்கத்தின் மீதேறி
சிங்காரமாய் ஜொலிக்க…

கூப்பிட்ட குரலுக்கு ஒடோடி வந்தருளும்
துதிக்கும் நெஞ்சகத்தில் சக்தியாய் உருவெடுக்கும் துக்கநிவாரணியே தித்திக்கும் குரல் அழகி எத்திக்கும் புகழ் ஓங்க

கடைக்கண்ணால் பார்த்திடம்மா..
நீ கருணை மழை பொழிந்திடம்மா…
கடைக்கண்ணால் பார்த்திடம்மா..
நீ கருணை மழை பொழிந்திடம்மா…

பாலவிளை ஆள்பவளே
பார் போற்றும் பைரவியே
பக்தர்கள்தம் குறைதீர்க்க
சிங்கத்தின் மீதேறி
சிங்காரமாய் ஜொலிக்க…

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

பாடல் இயற்றியவர் : வித்யாஜோதி.த.ராதிகா முருகன் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

பாலவிளை ஆள்பவளே பார் போற்றும் பைரவியே... அம்மன் பாடல் | Aanmeega Bhairav

https://www.youtube.com/watch?v=vhqWPiZEH6o
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.