Type Here to Get Search Results !

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்... பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி
வைகுண்டம் ஆள்கிறாய்
ஊற்றுமுகம் ஆள்கிறாய்

காவி துணி அணிந்தவா
கரை சேர்க்க வேணுமய்யா

காவி துணி அணிந்தவா
கரை சேர்க்க வேணுமய்யா

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி
வைகுண்டம் ஆள்கிறாய்
ஊற்றுமுகம் ஆள்கிறாய்

ஆறு தலைமுறை தவமப்பா
ஆறு தலைமுறை தவமப்பா
ஏழாம் தலைமுறையில் கண்டோமே
உனை
ஏழாம் தலைமுறை கண்டோமே

ஐந்து பதி கண்டவா
பாண்டவர்களை வரவழைத்தவா

ஐந்து பதி கண்டவா
பாண்டவர்களை வரவழைத்தவா

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி
வைகுண்டம் ஆள்கிறாய்
ஊற்றுமுகம் ஆள்கிறாய்

காவி துணி அணிந்தவா
கரை சேர்க்க வேணுமய்யா

ஒரு புத்தியாக உள் என்னை கொண்டோர்க்கு
புது புத்தி ஈந்து பூலோகம் ஆள வைப்பவனே
என் மொத்த புத்தியும் உனையே சுத்துகிறது
பூலோகம் வேண்டாம் நீ போதுமய்யா

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி
வைகுண்டம் ஆள்கிறாய்
ஊற்றுமுகம் ஆள்கிறாய்

காவி துணி அணிந்தவா
கரை சேர்க்க வேணுமய்யா

நீ எனக்கு ஆக வேண்டும் எஜமானன்
நான் உனக்கு ஆக வேண்டும் உபகாரன்

தினம் ஒருமுறை உன் நாமம் கேட்டால் பாவம் தீருமென்றால்
தினம் பல முறை உன் நாமத்தை மட்டுமே கூறும் எனக்கு பாவமில்லையே அய்யா

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி
வைகுண்டம் ஆள்கிறாய்
ஊற்றுமுகம் ஆள்கிறாய்

காவி துணி அணிந்தவா
கரை சேர்க்க வேணுமய்யா

காவி துணி அணிந்தவா
கரை சேர்க்க வேணுமய்யா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.