Type Here to Get Search Results !

பிச்சி பூ ஊற்றுமுக நேசகாரா உனக்கு...பாடல்

பிச்சி பூ நேசகாரா உனக்கு
உச்சபடிப்பு படிக்குறோமே
மச்ச சோறு உனக்கு வேணாமப்பா
பச்ச காய்கறி உனக்கு போதுமய்யா

ஐந்து சுத்து சுத்துகிறோம்
அய்யாவே உனை காண
பந்து போல சுழன்று கொண்டு வருகிறாய்
பக்தர்களை காண

ஜாதி இல்லையே
பேதம் இல்லையே
உனக்கு மதமும் இல்லையே

ஜாதி இல்லையே
பேதம் இல்லையே
உனக்கு மதமும் இல்லையே

பிச்சி பூ நேசகாரா உனக்கு
உச்சபடிப்பு படிக்குறோமே
மச்ச சோறு உனக்கு வேணாமப்பா
பச்ச காய்கறி உனக்கு போதுமய்யா

சுருள் வைத்து வணங்குகிறோம் எங்கள் அய்யாவே
அருள் தந்து காத்திடணும் எங்கள் அய்யாவே
கோடி புண்ணியம் செய்துள்ளேன் பகவானே
நானும் உன் பதம் சார்த்துதலை காண
நாடி வந்து எனையும் நீ இச்சமயம் பிறக்க செய்தாய்

ஜாதி இல்லையே
பேதம் இல்லையே
உனக்கு மதமும் இல்லையே

பிச்சி பூ நேசகாரா உனக்கு
உச்சபடிப்பு படிக்குறோமே
மச்ச சோறு உனக்கு வேணாமப்பா
பச்ச காய்கறி உனக்கு போதுமய்யா

வாய் வலிக்க வலிக்க பாட வேணும்
நா இனிக்க இனிக்க பாட வேணும்
பனைமரத்தழகா பனைமரம் போல்
உயர்ந்து நிற்கிறது உன் ஆலயம்
திணையளவு இருக்கும் நீயோ
மலையளவு தருகிறாய் தரிசனம்
உன் வழியே எங்களுக்கு வழி
உன் விழி தராது எங்களுக்கு பழி

ஜாதி இல்லையே
பேதம் இல்லையே
உனக்கு மதமும் இல்லையே

பிச்சி பூ நேசகாரா உனக்கு
உச்சபடிப்பு படிக்குறோமே
மச்ச சோறு உனக்கு வேணாமப்பா
பச்ச காய்கறி உனக்கு போதுமய்யா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.