Type Here to Get Search Results !

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா... பாடல்

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா
ஆட்டத்திலே - உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

பால்காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா
ஆட்டத்திலே - உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

சேவடியைக் காணவென்றே ஓடிவருவார்
முருகா - ஓடி வருவார் - அவர் சிந்தையிலே
உந்தனையே பாடி வருவார்
முருகா பாடி வருவார்

மச்சக்காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா
ஆட்டத்திலே - உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

ஏறாத மலையினிலே ஏறி வருவார், முருகா
ஏறி வருவார் -ஏறுமயில் வாகனனைக்
காண வருவார் - முருகா காண வருவார்

பூக்காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா
ஆட்டத்திலே - உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

உள்ளவரும் இல்லாதாரும் பேதமில்லையே முருகா
பேதமில்லையே - அருள் வள்ளல்
உந்தன் அன்பினுக்கோர் எல்லை இல்லையே
முருகா எல்லை இல்லையே

பன்னீர் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா
ஆட்டத்திலே - உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

தேரோடும் வீதியெங்கும் கூடியிருப்பார்
முருகா - கூடியிருப்பார் - வள்ளிதெய்வயானை
அம்மையுடன் கண்டு களிப்பார்
முருகா கண்டு களிப்பார்

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா
ஆட்டத்திலே - உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா
ஆட்டத்திலே - உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா.. பாடல் Aanmeega Bhairav

https://www.youtube.com/watch?v=VOWO2dgYaC0
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.