Type Here to Get Search Results !

பாறையடி பிள்ளையார் சபரிமலை வாசனும்... பாடல்

பிள்ளையார் பட்டி நாயகனும் சபரிமலை வாசனும்
பூமி ஆள்பவனும் எல்லையில்லா பாறையடியில் தருவது
தொல்லையில்லா வாழ்வு
வணங்கிட இல்லை ஓர் தாழ்வு

பிழையில்லா ஞானத்தை தந்திடும் பிள்ளையாரே
பிழையெல்லாம் போக்க போடுகிறேன் தோப்பு கரணமே
சுழி போட்டு துவங்கும் செயல் யாவுமே
உன் வழி துணையால் எளிதில் வெற்றி ஆகுமே

அது யாரு யாரு யாரு
அதுதான் பாறையடி பிள்ளையாரு

அத்தனை பேரையும் இங்கே கண்டிட
எத்தனை பேரும் நின்று வணங்கிட
சுத்தமான அருளை பெற்றிட
வந்திடுங்க பாறையடி ஆலயத்திற்கு

சாரங்கன் மகன் சாஸ்தாவே
சாதிக்க சாட்சியாக இருப்பவனே
சாதி வேற்றுமை வேண்டாம்
எனவே சபரிமலையில் அம்பெய்தவனே
சாஸ்தாவை கண்டு வணங்கிடவே சகலமும் நமக்கு கைகூடுதே

அது யாரு யாரு யாரு
அதுதான் பாறையடி சாஸ்தா

அத்தனை பேரையும் இங்கே கண்டிட
எத்தனை பேரும் நின்று வணங்கிட
சுத்தமான அருளை பெற்றிட
வந்திடுங்க பாறையடி ஆலயத்திற்கு

பூதத்தான் ஆளும் பூமி எல்லாமே பூமாரி போல மென்மை
புண்ணியம் வேண்டி வருவோர்க்கெல்லாம் தருவது உன் தன்மை
நாள்தோறும் உனை மறவாது செய்திடுவோம் பூஜை
செய்கின்ற பூஜைகளில் உன் மகிழ்வே எங்களின் ஆசை

அது யாரு யாரு யாரு
அதுதான் பாறையடி பூதத்தான்

அத்தனை பேரையும் இங்கே கண்டிட
எத்தனை பேரும் நின்று வணங்கிட
சுத்தமான அருளை பெற்றிட
வந்திடுங்க பாறையடி ஆலயத்திற்கு

பிள்ளையார் பட்டி நாயகனும் சபரிமலை வாசனும்
பூமி ஆள்பவனும் எல்லையில்லா பாறையடியில் தருவது
தொல்லையில்லா வாழ்வு
வணங்கிட இல்லை ஓர் தாழ்வு

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.