Type Here to Get Search Results !

பயங்கரமா இருப்பா பாறையடி இசக்கி அம்மா... பாடல்

பயம் ஒண்ணும் வேண்டாம் பயங்கரமா இருப்பா
அன்பாலே ஆவேசத்தை அடக்கிடலாம்
எதிரியே எதிரே வணங்கி நின்றாலும்
எல்லாம் கொடுத்து காத்திடுவா

இச்சா சக்தியே பாறையடி இசக்கி அம்மா
மொத்த சக்தியும் நீயே அம்மா

இச்சா சக்தியே பாறையடி இசக்கி அம்மா
மொத்த சக்தியும் நீயே அம்மா

பயம் ஒண்ணும் வேண்டாம் பயங்கரமா இருப்பா
அன்பாலே ஆவேசத்தை அடக்கிடலாம்

மயில்போலே நடக்கிறாய் மனமெல்லாம் குளிருது
மகராசி உன் வரவால் நாடெல்லாம் செழிக்குது
இருளெல்லாம் போக்கி ஒளி தந்து காக்கும் இசக்கி அம்மா
கோரபல் காட்டி கோபம் வேண்டாம்
பாரத்தை குறைத்திட கண் பார்த்தால் போதும்

இச்சா சக்தியே பாறையடி இசக்கி அம்மா
மொத்த சக்தியும் நீயே அம்மா

இச்சா சக்தியே பாறையடி இசக்கி அம்மா
மொத்த சக்தியும் நீயே அம்மா

பயம் ஒண்ணும் வேண்டாம் பயங்கரமா இருப்பா
அன்பாலே ஆவேசத்தை அடக்கிடலாம்

மேளத்திற்கு போட்டிடுவா தாளம்
வில்லிசைக்கு மயங்கிடுவா நாளும்
நோயோடு வந்தவரின் நோயெல்லாம் நீக்கி
நலமாக வாழ செய்வாயே
தாயாக இருந்து கேட்டதை கேட்டவர்க்கு தந்து
புன்னகையால் மகிழ செய்வாயே

இச்சா சக்தியே பாறையடி இசக்கி அம்மா
மொத்த சக்தியும் நீயே அம்மா

இச்சா சக்தியே பாறையடி இசக்கி அம்மா
மொத்த சக்தியும் நீயே அம்மா

பயம் ஒண்ணும் வேண்டாம் பயங்கரமா இருப்பா
அன்பாலே ஆவேசத்தை அடக்கிடலாம்

வருமுன்னே வாசனை வருகுது
தாயே
ஊரெல்லாம் உன் புகழை பாடுது
மனதுக்குள் நினைத்தாலே மகமாயி
உன் ரூபம் மகிழ்ச்சியை தந்திடுது
குணமெல்லாம் நன்றாக இருந்தாலே
குணவதி உன் கரத்தில் இடம் கிடைக்குது

இச்சா சக்தியே பாறையடி இசக்கி அம்மா
மொத்த சக்தியும் நீயே அம்மா

இச்சா சக்தியே பாறையடி இசக்கி அம்மா
மொத்த சக்தியும் நீயே அம்மா

பயம் ஒண்ணும் வேண்டாம் பயங்கரமா இருப்பா
அன்பாலே ஆவேசத்தை அடக்கிடலாம்
எதிரியே எதிரே வணங்கி நின்றாலும்
எல்லாம் கொடுத்து காத்திடுவா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.