Type Here to Get Search Results !

துள்ளி விளையாடும் எம்பிரானை காண கிள்ளியூர் வாருங்களேன்... பாடல்

சித்தி கணபதியும் சிங்கார வேலனும் கணநேரமும் உன்னோடு
ஒரு கணமாவது இருந்திடு என்னோடு
நாக தோஷங்கள் போக்கிடும் நாகராஜாவே
குடும்பத்தோடு வாசம் செய்யும் மாயம் என்ன
ஐயப்ப கோஷம் அகிலத்தை ஆள
ஹரிஹரசுதன் இங்கே ஐயம் போக்குகிறான்

சித்தி கணபதியும் சிங்கார வேலனும் கணநேரமும் உன்னோடு
ஒரு கணமாவது இருந்திடு என்னோடு

துள்ளி விளையாடும் எம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்
எள்ளி நகையாடும் தம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்

துள்ளி விளையாடும் எம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்
எள்ளி நகையாடும் தம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்

சிவமே சிவமே மூன்றெழுத்து சிவமே
மூன்று கண்ணு சிவம் காக்கணும் எனையே
கருவிழி முழுதும் உன் இடம் தானே
இருவிழி நீரை நீ அறியாயோ
பனிமலை நாதா பரம்பொருள் நீயே
பணிவுடன் உனை வேண்டுகிறேனே

துள்ளி விளையாடும் எம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்
எள்ளி நகையாடும் தம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்

துள்ளி விளையாடும் எம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்
எள்ளி நகையாடும் தம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்

சித்தி கணபதியும் சிங்கார வேலனும் கணநேரமும் உன்னோடு
ஒரு கணமாவது இருந்திடு என்னோடு

வெண்ணீற்று சாம்பலால் வெள்ளை உள்ளம் கொண்டவா
வெந்திடும் மனதை ஆற்றிட ஓடி வா
தாரை தாரையாக அபிஷேகம் தரணி முழுதும் நடக்குதய்யா
தாராளமாக அள்ளி கொடுக்க எனக்கு வரம் தந்திடப்பா
உந்தன் உயிர் எந்தன் உணர்வில் தெரியுதப்பா

துள்ளி விளையாடும் எம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்
எள்ளி நகையாடும் தம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்

துள்ளி விளையாடும் எம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்
எள்ளி நகையாடும் தம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்

சித்தி கணபதியும் சிங்கார வேலனும் கணநேரமும் உன்னோடு
ஒரு கணமாவது இருந்திடு என்னோடு

தேனும் பாலும் இளநீரும் மழையாக பொழிய
தேவலோகத்தாரும் துதி பாட
மானும் மீனும் வணங்கி நிற்க
வானும் மண்ணும் அசையாது நிற்க
அரை நிலா அறை நில சூடிய வட்ட நிலாவே
ஆக வேண்டும் உன் கழுத்துக்கு மாலா

துள்ளி விளையாடும் எம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்
எள்ளி நகையாடும் தம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்

துள்ளி விளையாடும் எம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்
எள்ளி நகையாடும் தம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்

சித்தி கணபதியும் சிங்கார வேலனும் கணநேரமும் உன்னோடு
ஒரு கணமாவது இருந்திடு என்னோடு
நாக தோஷங்கள் போக்கிடும் நாகராஜாவே
குடும்பத்தோடு வாசம் செய்யும் மாயம் என்ன
ஐயப்ப கோஷம் அகிலத்தை ஆள
ஹரிஹரசுதன் இங்கே ஐயம் போக்குகிறான்

துள்ளி விளையாடும் எம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்
எள்ளி நகையாடும் தம்பிரானை
காண கிள்ளியூர் வாருங்களேன்

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.