திருப்பாவை – பாசுரம் பதினெட்டு
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்!
நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தங் கமழுங் குழலி! கடைதிறவாய்
கந்தங் கமழுங் குழலி! கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்…..
திருவெம்பாவை – பாசுரம் பதினெட்டு
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே!இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
பெண்ணே!இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்…..