Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

பாறையடி இசக்கி கேட்டு ரசிக்க பாட்டு கேட்க வந்திடம்மா… பாடல்

தட்டட்டும் தட்டட்டும் மிருதங்கம் தட்டட்டும்ஊதட்டும் ஊதட்டும் நாதஸ்வரம் ஊதட்டும்ஒலிக்கட்டும் ஒலிக்கட்டும் மேளங்கள் ஒலிக்கட்டும் பாறையடி இசக்கி கேட்டு ரசிக்க பாட்டு கேட்க வந்திடம்மாபாறையடி இசக்கி கேட்டு ரசிக்க பாட்டு கேட்க வந்திடம்மா தட்டட்டும் தட்டட்டும் மிருதங்கம்...
HomeSongsதாயே புவனேஸ்வரி சாமுண்டேஸ்வரி நீயே எனது பரமேஸ்வரி… அதங்கோடு பாடல்

தாயே புவனேஸ்வரி சாமுண்டேஸ்வரி நீயே எனது பரமேஸ்வரி… அதங்கோடு பாடல்

தாயே புவனேஸ்வரி சாமுண்டேஸ்வரி நீயே எனது பரமேஸ்வரி
புவனத்தை ஆண்டு பூமாரி போன்று புகழினை தந்திடம்மா
சகலமும் நீயே தர்மத்தை காத்திட சக்தியாக வந்தவளே
கண்ணாத்தா கருமாரி இங்கே இருக்கிறாள்
புவனேஸ்வரி தாயாக உருமாறி இருக்கிறாள்
பொன்னாத்தா பூவாத்தா இங்கே இருக்கிறாள்
சாமுண்டேஸ்வரி தாயாக வடிவாகி இருக்கிறாள்

ஜெய ஜெய வாலா புவனேஸ்வரி
ஜெய ஜெய காளி சாமுண்டேஸ்வரி
ஜெய ஜெய வாலா புவனேஸ்வரி
ஜெய ஜெய காளி சாமுண்டேஸ்வரி

இருவரையும் வணங்கிட போகும் துயரெல்லாம் திருமுகத்தை கண்ட பின் அஞ்சிட தேவையில்லை
பாவை எனது பக்தியை கண்டு நீயும் உன் பாதத்தில் இடம் தர வேணுமே
காட்சி தந்து எனை கட்டி அணைத்திட நீ ஓடி வர வேணுமே
தங்கத்திலும் வைரத்திலும் மாணிக்கத்திலும் முத்திலும் ஜொலிப்பவளே
தங்க மனமுடைய எந்தன் உள்ளத்திலும் ஜொலிப்பாயா

மண்ணும் விண்ணும் ஆள்பவளே பெண்களின் வழி துணையானவளே
மண்ணும் விண்ணும் ஆள்பவளே பெண்களின் வழி துணையானவளே

தாயே புவனேஸ்வரி சாமுண்டேஸ்வரி நீயே எனது பரமேஸ்வரி
புவனத்தை ஆண்டு பூமாரி போன்று புகழினை தந்திடம்மா
சகலமும் நீயே தர்மத்தை காத்திட சக்தியாக வந்தவளே

மாங்கல்யம் நிலைத்திட அருளிடனும் மக்கள் செல்வம் புகழ் கல்வி தந்திடணும்
சிவனின் பாதியே ஜோதி ரூபிணியே வாழ்வின் மீதியை வளமாக்கிட வேணுமம்மா
சிங்கார பூமகளே செந்தூர பொட்டு வைத்து காஞ்சிபுர பட்டுடுத்தி சிரிக்கின்ற அழகு மயக்குதம்மா
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அத்தனை ஜென்மத்திலும் துணையாக வந்து கரம் பிடித்து வழி நடத்தணும்
கற்பகமே காமதேனுவே அட்சயமே அம்மா
அற்புதமே ஆனந்ததேனே அதங்கோடு அம்மா

வர வேணும் தாயே அருள் தர வேணும் நீயே
வர வேணும் தாயே அருள் தர வேணும் நீயே

தாயே புவனேஸ்வரி சாமுண்டேஸ்வரி நீயே எனது பரமேஸ்வரி
புவனத்தை ஆண்டு பூமாரி போன்று புகழினை தந்திடம்மா
சகலமும் நீயே தர்மத்தை காத்திட சக்தியாக வந்தவளே

புன்னகையின் நாயகியே புவனேஸ்வரி
இன்முகத்தை காட்டிடுவாய் சாமுண்டேஸ்வரி
அதங்கோட்டில் புவனேஸ்வரியும் சாமுண்டேஸ்வரியும்
அருள்மழை பொழிவதில் நனைந்திடுங்கள்
வீரத்தையும் தீரத்தையும் தந்திடுவாள் வினையையும் கர்மத்தையும் போக்கிடுவாள்
சங்கரன் துணையே சண்முகன் தாயே சந்தண மாரி சர்வ மங்களத்தை தந்திடுவாய்

திக்கெட்டும் காத்திடுவா புவனேஸ்வரி
திக்கற்றவரை காத்திடுவா சாமுண்டேஸ்வரி
திக்கெட்டும் காத்திடுவா புவனேஸ்வரி
திக்கற்றவரை காத்திடுவா சாமுண்டேஸ்வரி

தாயே புவனேஸ்வரி சாமுண்டேஸ்வரி நீயே எனது பரமேஸ்வரி
புவனத்தை ஆண்டு பூமாரி போன்று புகழினை தந்திடம்மா
சகலமும் நீயே தர்மத்தை காத்திட சக்தியாக வந்தவளே
கண்ணாத்தா கருமாரி இங்கே இருக்கிறாள்
புவனேஸ்வரி தாயாக உருமாறி இருக்கிறாள்
பொன்னாத்தா பூவாத்தா இங்கே இருக்கிறாள்
சாமுண்டேஸ்வரி தாயாக வடிவாகி இருக்கிறாள்

ஜெய ஜெய வாலா புவனேஸ்வரி
ஜெய ஜெய காளி சாமுண்டேஸ்வரி
ஜெய ஜெய வாலா புவனேஸ்வரி
ஜெய ஜெய காளி சாமுண்டேஸ்வரி

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here