திருப்பாவை – பாசுரம் பத்தொன்பது
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை
மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்.
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்…..
திருவெம்பாவை – பாசுரம் பத்தொன்பது
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கப் பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால்
அங்கப் பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்!
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்!
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க;
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க;
எங்கை உனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க;
எங்கை உனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க;
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க;
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க;
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோ ரெம்பாவாய்.
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோ ரெம்பாவாய்…..