Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்… அதங்கோடு பாடல்

கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்மன்னா மணிவண்ணா உனை கண்டிட கஷ்டங்கள் தீரும்உபதேசம் செய்தாயே யுத்த களத்திலேஉலகனத்தையும் கட்டி வைத்தாய் உந்தன் சிரிப்பிலே ஆடாடி ஓடோடி வந்திடு கண்ணாஆனந்த கூத்தாடி விளையாடிடு கண்ணாஆராரோ...
HomeSongsசாந்தமான துர்க்கா என் வாழ்வின் சாட்சியே… பாடல்

சாந்தமான துர்க்கா என் வாழ்வின் சாட்சியே… பாடல்

சாந்தமான துர்க்கா என் வாழ்வின் மகிழ்ச்சியே
சொந்தமான என் தாயே தந்திடுவாய் புகழ்ச்சியே
சாந்தமான துர்க்கா என் வாழ்வின் மகிழ்ச்சியே
சொந்தமான என் தாயே தந்திடுவாய் புகழ்ச்சியே

தாமரை இதழ் போன்ற மெல்லிய மகளே
தரணியெங்கும் காத்திடுவாய் பூ மகளே
தாமரை இதழ் போன்ற மெல்லிய மகளே
தரணியெங்கும் காத்திடுவாய் பூ மகளே

ஓம் ஓம் துர்க்கா ஓங்கார துர்க்கா
ஆனாம்பிகைநகரின் அழகு துர்க்கா
ஓம் ஓம் துர்க்கா ஓங்கார துர்க்கா
ஆனாம்பிகைநகரின் அழகு துர்க்கா

ஓடையிலே போகும் போது உன்னடியை வந்து சேர
ஓதுகின்ற நாமங்கள் கேட்குதாம்மா
பாவி என்னை ஏற்பதற்கு நானும் காவி உடுக்கவில்லை
பாராமல் இருந்திடாமல் பாதுகாத்திடம்மா

துர்க்கை உனக்கு எத்தனை கைகள் இருக்கு
அத்தனை கைகளும் அணைக்கனும் என்னை

துர்க்கை அம்மனை துதிப்போமே
துன்பங்கள் யாவும் துடைப்பாளே
துர்க்கை அம்மனை துதிப்போமே
துன்பங்கள் யாவும் துடைப்பாளே

ஓம் ஓம் துர்க்கா ஓங்கார துர்க்கா
ஆனாம்பிகைநகரின் அழகு துர்க்கா
ஓம் ஓம் துர்க்கா ஓங்கார துர்க்கா
ஆனாம்பிகைநகரின் அழகு துர்க்கா

சாந்தமான துர்க்கா என் வாழ்வின் மகிழ்ச்சியே
சொந்தமான என் தாயே தந்திடுவாய் புகழ்ச்சியே

அற்புதங்கள் செய்திடுவா அன்பை வாரி தந்திடுவா
பற்பல அதிசயங்களை கண் முன்னே நடத்திடுவா
சோதனைகள் வந்தாலும் சோதிக்க மாட்டா
சாதனைகள் செய்திடவே அருளிடுவா

எதிர்க்கின்ற எதிரியை ஒடோட செய்து
காக்கின்ற அன்னையாக மாறிடுவா

பாவை உனது பாவாடை தாவணியும்
அழகாய் ஜொலிக்கும் காலணியும்
பாவை உனது பாவாடை தாவணியும்
அழகாய் ஜொலிக்கும் காலணியும்

ஓம் ஓம் துர்க்கா ஓங்கார துர்க்கா
ஆனாம்பிகைநகரின் அழகு துர்க்கா
ஓம் ஓம் துர்க்கா ஓங்கார துர்க்கா
ஆனாம்பிகைநகரின் அழகு துர்க்கா

சாந்தமான துர்க்கா என் வாழ்வின் மகிழ்ச்சியே
சொந்தமான என் தாயே தந்திடுவாய் புகழ்ச்சியே
சாந்தமான துர்க்கா என் வாழ்வின் மகிழ்ச்சியே
சொந்தமான என் தாயே தந்திடுவாய் புகழ்ச்சியே

தாமரை இதழ் போன்ற மெல்லிய மகளே
தரணியெங்கும் காத்திடுவாய் பூ மகளே
தாமரை இதழ் போன்ற மெல்லிய மகளே
தரணியெங்கும் காத்திடுவாய் பூ மகளே

ஓம் ஓம் துர்க்கா ஓங்கார துர்க்கா
ஆனாம்பிகைநகரின் அழகு துர்க்கா
ஓம் ஓம் துர்க்கா ஓங்கார துர்க்கா
ஆனாம்பிகைநகரின் அழகு துர்க்கா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here