நான் தாலாட்டு பாட என் மடிமீது குழந்தை ஆகிடம்மா
என் தாலாட்டில் நீ தூங்க வரம் தந்திடம்மா
ஆராரோ பாட தீராத ஆசை
மேக்காவிளை தாயே என் சேயாக பேராசை
ஆராரோ பாட தீராத ஆசை
மேக்காவிளை தாயே என் சேயாக பேராசை
மழலை சத்தம் கேட்க காதோடு மனதும் ஏங்குது
மதியழகி மன குறை தீர்க்க ஓடி வந்திடு
பக்திக்கு என்னிடம் குறையில்லை
குறையில்லா வாழ்வு தருவதே உன் வேலை
ஆராரோ பாட தீராத ஆசை
மேக்காவிளை தாயே என் சேயாக பேராசை
மேக்காவிளை தாயே தந்திடணும் சேயே
மெல்ல மெல்ல மனமிரங்கி வந்திடணும் நீயே
பழிசொல்லிற்கு ஆளாக்காதே பத்ரகாளி
பக்தனுக்கு ஒரு வரம் தந்திடு காளி
ஆராரோ பாட தீராத ஆசை
மேக்காவிளை தாயே என் சேயாக பேராசை
பத்திரமா நான் உனை பாத்திட வேணுமே
பக்குவமா நீ அதற்கு வந்திட வேணுமே
இனியும் தாமதம் வேண்டாமம்மா
மனமோ இனி தாங்காதம்மா
ஆராரோ பாட தீராத ஆசை
மேக்காவிளை தாயே என் சேயாக பேராசை
துள்ளி குதித்து நீ விளையாடுவதை
எள்ளி நகையாட விரும்புகிறோன்
துளி அளவு களங்கம் இல்லாத நீயோ
தூய என் வீட்டில் குடியேறம்மா
ஆராரோ பாட தீராத ஆசை
மேக்காவிளை தாயே என் சேயாக பேராசை
தொட்டில் கட்டணும் அதில் நீ தூங்கணும்
ஏட்டில் நீ எழுத அதை நான் படிக்கணும்
நல்வாழ்வு தந்தவளே தலைடுமுறை தத்திடம்மா
நமசிவாயன் நாயகியே நல்ல குலம் செழிக்கணுமம்மா
ஆராரோ பாட தீராத ஆசை
மேக்காவிளை தாயே என் சேயாக பேராசை
கையில் தூக்கி ஆடுவேன் தாலாட்டு பாடுவேன்
முத்தமிழே முழுநிலவே கையில் தவழ ஓடிவா
எத்தனை நாள் கனவே நனவாகிட ஓடிவா
என்னோடு உறவாட வந்திடம்மா
ஆராரோ பாட தீராத ஆசை
மேக்காவிளை தாயே என் சேயாக பேராசை
நான் தாலாட்டு பாட என் மடிமீது குழந்தை ஆகிடம்மா
என் தாலாட்டில் நீ தூங்க வரம் தந்திடம்மா
ஆராரோ பாட தீராத ஆசை
மேக்காவிளை தாயே என் சேயாக பேராசை
ஆராரோ பாட தீராத ஆசை
மேக்காவிளை தாயே என் சேயாக பேராசை
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd