கணேசா கணேசா பாறையடி கணேசா
கணேசா கணேசா பாதுகாவலனே கணேசா
கணேசா கணேசா பாறையடி கணேசா
கணேசா கணேசா பாதுகாவலனே கணேசா
மூஷிக வாகனனே முக்கண்ணன் மகனே
என்றுமே உனக்கு முதல் வணக்கம்
முதல் பொருள் ஆனவனே முருகனின் அண்ணனே
என்றுமே உனை வணங்குவது என் வழக்கம்
கணேசா கணேசா பாறையடி கணேசா
கணேசா கணேசா பாதுகாவலனே கணேசா
பிள்ளையார் என்ற பெயரில் கணேசா
பிரச்சனையை தீர்த்து வைக்கும் கணேசா
தோப்பு கரணம் போடுகிறோம் கணேசா
தோல்வியை தந்திடாதே கணேசா
கணேசா கணேசா பாறையடி கணேசா
கணேசா கணேசா பாதுகாவலனே கணேசா
ஆவணி சதுர்த்தி நாளில் ஆனைமுகா நீ பிறந்தாய்
ஆடிபாடி கொண்டாடுகிறோம் ஆனந்த கணேசா
ஒவ்வொரு வருடமும் புது ஜனனம் உனக்கு
ஒவ்வொரு நாளும் குதூகலம் எனக்கு
கணேசா கணேசா பாறையடி கணேசா
கணேசா கணேசா பாதுகாவலனே கணேசா
தும்பிக்கையானே கணேசா
துதிபாடுகிறேன் கணேசா
நம்பிக்கையை தந்திடுவாய் கணேசா
நல்ல உள்ளம் என்றும் நீயே கணேசா
கணேசா கணேசா பாறையடி கணேசா
கணேசா கணேசா பாதுகாவலனே கணேசா
மஞ்சளில் வந்த தலைமகனே
குஞ்சர தலையை உடையவனே
காதும் குண்டலமும் அசைவதை காணணும் காலமெல்லாமே
கணேசா கணேசா பாறையடி கணேசா
கணேசா கணேசா பாதுகாவலனே கணேசா
மாம்பழத்தை தந்திடப்பா கணேசா
மாதவனின் மருமகனே கணேசா
தேடி வரேன் பாறையடி கணேசா
தேவையெல்லாம் தீர்த்திடய்யா கணேசா
கணேசா கணேசா பாறையடி கணேசா
கணேசா கணேசா பாதுகாவலனே கணேசா
மூஷிக வாகனனே முக்கண்ணன் மகனே
என்றுமே உனக்கு முதல் வணக்கம்
முதல் பொருள் ஆனவனே முருகனின் அண்ணனே
என்றுமே உனை வணங்குவது என் வழக்கம்
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd