கணபதி கணபதி கணபதியே
கஜமுகம் உடைய கணபதியே
தெங்கம்பழஞ்சி கோவிலிலே
தெற்கே குடி கொண்ட விநாயகா
எருக்கம் பூவை சூடி எலி மீது அமர்ந்து
எளியவர்க்கு எல்லாம் தந்து
என்றும் எங்களோடு நீ விநாயகா
புத்தியை தந்திடுவான் ஞான கணபதி
பக்தியை தந்திடுவான் ஐயப்ப சாமி
நல்லகாலம் தந்திடுவான் நாகராஜா
மெல்ல மெல்ல நடந்திடுவாள் இசக்கி அம்மா
சேயாக காத்திடுவாள் பத்ரகாளி
மாயமாக காத்திடுவான் மாடன்சாமி
ஐயப்பா ஐயப்பா ஐயப்பனே
ஐயமெல்லாம் போக்கிடுவான் எங்க அப்பனே
தெங்கம்பழஞ்சி கோவிலிலே
தெளிவான தரிசனம் தந்திடும் ஐயா
செங்கோல் ஏந்தி சபரியை ஆள்பவனே
மங்காத ஒளியாக ஜொலிப்பவனே
புத்தியை தந்திடுவான் ஞான கணபதி
பக்தியை தந்திடுவான் ஐயப்ப சாமி
நல்லகாலம் தந்திடுவான் நாகராஜா
மெல்ல மெல்ல நடந்திடுவாள் இசக்கி அம்மா
சேயாக காத்திடுவாள் பத்ரகாளி
மாயமாக காத்திடுவான் மாடன்சாமி
நாலுதிசை மக்களும் கேட்டிடுங்க
நாகராஜா நாகதோஷம் போக்கிடுவாங்க
வளைந்து நெளிந்து வந்திடுவாங்க
வற்றாத வளம் வாரி தந்திருவாங்க
ஏழு லோகத்தில் வாழும் ராஜா
எங்க ஊரின் நாகராஜா
புத்தியை தந்திடுவான் ஞான கணபதி
பக்தியை தந்திடுவான் ஐயப்ப சாமி
நல்லகாலம் தந்திடுவான் நாகராஜா
மெல்ல மெல்ல நடந்திடுவாள் இசக்கி அம்மா
சேயாக காத்திடுவாள் பத்ரகாளி
மாயமாக காத்திடுவான் மாடன்சாமி
அத்தனை பேரும் இங்கே வாசமே
அருள் பெற எத்தனை பேரும் இங்கே வாருமே
அத்தனை பேரும் இங்கே வாசமே
அருள் பெற எத்தனை பேரும் இங்கே வாருமே
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd