Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்கு சித்திரை மாதம் அத்தம் திருவிழா… பாடல்

கஜமுகா கணேசா முதற் தலைவா கணபதிகரமெல்லாம் சிவக்குதப்பா கஜமுகா கஜமுகாகரங்கள் கூப்பி வணங்கையிலே கஜமுகா கஜமுகாதோப்புகரண சாமி என்று குழந்தைகளும் சொல்லுதேகுளத்து புழை பாலகனின் சோதரனே கணேசா கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்குசித்திரை மாதம்...
HomeSongsஅதிசயத்தை நிகழ்த்திடுவா தெங்கம்பழஞ்சி பத்ரகாளி... பாடல்

அதிசயத்தை நிகழ்த்திடுவா தெங்கம்பழஞ்சி பத்ரகாளி… பாடல்

சத்தியத்தை காத்து நிப்பா பத்ரகாளி
அதிசயத்தை நிகழ்த்திடுவா தெங்கம்பழஞ்சி பத்ரகாளி
ஜடைமுடி தரித்தவனின் ஜடைகாரி
சமயத்தில் காக்கும் சந்தணமாரி

ஜெய ஜெய தேவி ஜெயத்தினை தந்திட
மக மக மகமாயி மங்கலத்தை தந்திட

ஜெய ஜெய தேவி ஜெயத்தினை தந்திட
மக மக மகமாயி மங்கலத்தை தந்திட

சத்தியத்தை காத்து நிப்பா பத்ரகாளி
அதிசயத்தை நிகழ்த்திடுவா தெங்கம்பழஞ்சி பத்ரகாளி
ஜடைமுடி தரித்தவனின் ஜடைகாரி
சமயத்தில் காக்கும் சந்தணமாரி

புயலாக சுழன்று ஒளியாக விரைந்து
செயல் யாவும் நடத்தி வைப்பா தெங்கம்பழஞ்சி பத்ரகாளி
குலமகளே குலதெய்வமே கும்பிட்டு நிற்கிறோம்
கற்பகமே கவின் மழையே காண துடிக்கிறோம்
கருமாரி உனக்கு கண்ணாயிரம்
கண்ணாத்தா உன்னால் மகிழ்ச்சி நூறாயிரம்

சலசலன்னு ஒலிக்குதம்மா சலங்கை சத்தம்
அசையாது நிற்குதம்மா ஊரு மொத்தம்

சலசலன்னு ஒலிக்குதம்மா சலங்கை சத்தம்
அசையாது நிற்குதம்மா ஊரு மொத்தம்

சத்தியத்தை காத்து நிப்பா பத்ரகாளி
அதிசயத்தை நிகழ்த்திடுவா தெங்கம்பழஞ்சி பத்ரகாளி
ஜடைமுடி தரித்தவனின் ஜடைகாரி
சமயத்தில் காக்கும் சந்தணமாரி

வேம்புமர வாசகாரி வேதனையை தீர்க்கும் தாயி
பாம்பாக உருமாறி காக்கும் தேவி
சன்னதியை தேடிவந்தால் சந்ததியை காத்து
சங்கடத்தை போக்கிடும் சகலகலாவல்லி
இங்ஙனம் நீ அருள் புரியணும் இப்போதே அள்ளி

மினுமினுன்னு மின்னுதம்மா மூக்குத்தி
மீனாட்சி உன்னருளால் நிற்கிறோம் உன்னை சுத்தி

மினுமினுன்னு மின்னுதம்மா மூக்குத்தி
மீனாட்சி உன்னருளால் நிற்கிறோம் உன்னை சுத்தி

சத்தியத்தை காத்து நிப்பா பத்ரகாளி
அதிசயத்தை நிகழ்த்திடுவா தெங்கம்பழஞ்சி பத்ரகாளி
ஜடைமுடி தரித்தவனின் ஜடைகாரி
சமயத்தில் காக்கும் சந்தணமாரி

ஜெய ஜெய தேவி ஜெயத்தினை தந்திட
மக மக மகமாயி மங்கலத்தை தந்திட

ஜெய ஜெய தேவி ஜெயத்தினை தந்திட
மக மக மகமாயி மங்கலத்தை தந்திட

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here