Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்கு சித்திரை மாதம் அத்தம் திருவிழா… பாடல்

கஜமுகா கணேசா முதற் தலைவா கணபதிகரமெல்லாம் சிவக்குதப்பா கஜமுகா கஜமுகாகரங்கள் கூப்பி வணங்கையிலே கஜமுகா கஜமுகாதோப்புகரண சாமி என்று குழந்தைகளும் சொல்லுதேகுளத்து புழை பாலகனின் சோதரனே கணேசா கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்குசித்திரை மாதம்...
HomeSongsஆடி ஆடி வாறாரே தெங்கம்பழஞ்சியின் மாடன் சாமி... பாடல்

ஆடி ஆடி வாறாரே தெங்கம்பழஞ்சியின் மாடன் சாமி… பாடல்

ஆடி ஆடி வாறாரே மாடன் சாமி
ஆளில்லாத இடத்திலேயும் இருக்கும் சாமி
காவல் காத்து நின்னிடுவான் கறுப்ப சாமி
காவல் தெய்வம் என்றும் நீயே கறுப்பசாமி

மாற்றம் தந்திடும் சாமி
தெங்கம்பழஞ்சி மாடன் சாமி

சொந்த பந்தங்கள் தந்த சாமி
சோதனை வந்தா காத்திடும் சாமி
தெங்கம்பழஞ்சியின் சொந்த சாமி
தங்க குணமுடைய கறுப்ப சாமி

மாற்றம் தந்திடும் சாமி
தெங்கம்பழஞ்சி மாடன் சாமி

தொல்லைகளை ஓடவிடும் மாடன் சாமி
எல்லையிலே காவல் நிற்கும் எங்க சாமி
பூமியை காக்க வந்த மாடன் சாமி
பரம்பரையாய் வணங்குகிறோம் மாடன் சாமி

மாற்றம் தந்திடும் சாமி
தெங்கம்பழஞ்சி மாடன் சாமி

உருண்டு விளையாடுது கண் இரண்டும்
தரையில் நடக்கவில்லை கால் இரண்டும்
எதிரியை ஓடவிட்ட மாடன் சாமி
பரிதியை போல் ஜொலிக்கும் மாடன் சாமி

மாற்றம் தந்திடும் சாமி
தெங்கம்பழஞ்சி மாடன் சாமி

ஆடி ஆடி வாறாரே மாடன் சாமி
ஆளில்லாத இடத்திலேயும் இருக்கும் சாமி
காவல் காத்து நின்னிடுவான் கறுப்ப சாமி
காவல் தெய்வம் என்றும் நீயே கறுப்பசாமி

மாற்றம் தந்திடும் சாமி
தெங்கம்பழஞ்சி மாடன் சாமி

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here