பாரெல்லாம் அரசாட்சி செய்யும் பத்ரகாளி
இங்கே தெங்கம்பழஞ்சியிலே
உயிரெல்லாம் உறைந்து நிக்குது
உந்தன் எழில்மிகு அழகினிலே
ஆத்தா ஆத்தா என்றுன்னை அழைக்கவே
நீ கண்
பாத்தா பாத்தா ஜனனம் முழுதாகுமே
ஆத்தா ஆத்தா என்றுன்னை அழைக்கவே
நீ கண்
பாத்தா பாத்தா ஜனனம் முழுதாகுமே
பாரெல்லாம் அரசாட்சி செய்யும் பத்ரகாளி
இங்கே தெங்கம்பழஞ்சியிலே
உயிரெல்லாம் உறைந்து நிக்குது
உந்தன் எழில்மிகு அழகினிலே
பட்டு வண்ண சேலையிலே பூங்காவன சோலையிலே
எட்டு திக்கும் காத்து நிற்கும் உந்தன் கண் விழி அழகு
தட்டு போன்ற பெரிய பொட்டினிலே தகதகக்கும் மேனியளே மெட்டெடுத்து தந்தவளே உந்தன் கறுகறுத்த கூந்தல் அழகு
வருகின்ற ஓசையெல்லாம் உந்தன் நாமம்
நீ வந்திட்டால் எங்களுக்கு என்றும் ஷேமம்
வருகின்ற ஓசையெல்லாம் உந்தன் நாமம்
நீ வந்திட்டால் எங்களுக்கு என்றும் ஷேமம்
பாரெல்லாம் அரசாட்சி செய்யும் பத்ரகாளி
இங்கே தெங்கம்பழஞ்சியிலே
உயிரெல்லாம் உறைந்து நிக்குது
உந்தன் எழில்மிகு அழகினிலே
ஆவல் கொண்டேன் நானும் ஆனந்தவல்லி
ஏவல் பில்லி சூணியம் போக்கிடுவா ஏகாந்தவல்லி
கடல் போலே உன்னிடம் கருணை வெள்ளம்
பால் போலே உன் மனது தூய உள்ளம்
சிங்காரி நீயும் சிலை அல்ல
ஒங்காரி இங்க உனை வணங்காத தலை இல்லை
சிங்காரி நீயும் சிலை அல்ல
ஒங்காரி இங்க உனை வணங்காத தலை இல்லை
பாரெல்லாம் அரசாட்சி செய்யும் பத்ரகாளி
இங்கே தெங்கம்பழஞ்சியிலே
உயிரெல்லாம் உறைந்து நிக்குது
உந்தன் எழில்மிகு அழகினிலே
தைரியத்தை தந்திடம்மா வீரகாளி
விஜயத்தை தந்திடம்மா விஜயகாளி
மகமாயி நீயும் மஞ்சளை தந்து
குணவதி நீயும் குங்குமத்தை காத்து
மாரியம்மா நீயும் மாங்கல்யம் காத்து
மங்காத மங்களத்தை தந்திடம்மா
பாரெல்லாம் அரசாட்சி செய்யும் பத்ரகாளி
இங்கே தெங்கம்பழஞ்சியிலே
உயிரெல்லாம் உறைந்து நிக்குது
உந்தன் எழில்மிகு அழகினிலே
ஆத்தா ஆத்தா என்றுன்னை அழைக்கவே
நீ கண்
பாத்தா பாத்தா ஜனனம் முழுதாகுமே
ஆத்தா ஆத்தா என்றுன்னை அழைக்கவே
நீ கண்
பாத்தா பாத்தா ஜனனம் முழுதாகுமே
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd