Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்கு சித்திரை மாதம் அத்தம் திருவிழா… பாடல்

கஜமுகா கணேசா முதற் தலைவா கணபதிகரமெல்லாம் சிவக்குதப்பா கஜமுகா கஜமுகாகரங்கள் கூப்பி வணங்கையிலே கஜமுகா கஜமுகாதோப்புகரண சாமி என்று குழந்தைகளும் சொல்லுதேகுளத்து புழை பாலகனின் சோதரனே கணேசா கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்குசித்திரை மாதம்...
HomeSongsசித்ரா பௌர்ணமி நாயகியே கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பா... பாடல்

சித்ரா பௌர்ணமி நாயகியே கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பா… பாடல்

சித்ரா பௌர்ணமி நாயகியே
முழுமதி உந்தன் முகமம்மா
தேயாத புன்னகை உன் உதட்டிலம்மா
கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பா
நிறைமதி என்றும் நீயம்மா

முத்து போன்ற அழகோடு முத்து குடைகள்
மொத்த பேரும் சுத்துகிறோம் அத்தம் நாளில் பவனி

முத்து போன்ற அழகோடு முத்து குடைகள்
மொத்த பேரும் சுத்துகிறோம் அத்தம் நாளில் பவனி

சித்ரா பௌர்ணமி நாயகியே
முழுமதி உந்தன் முகமம்மா
தேயாத புன்னகை உன் உதட்டிலம்மா
கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பா
நிறைமதி என்றும் நீயம்மா

தேசமெங்கும் தேடிதிரிந்தாலும் கிடைக்கமாட்டா
ஸ்ரீ தேவி காளிகாம்பா போல் ஓர் அன்னை
நேசம் வைத்தேன் உன்னிடம் எதையும் நேசிக்காது
பாசத்தோடு கரையேற்றுவாய் என்னை
வேஷமில்லாத பாசம் வைத்தேன் நானும்
பரமேசனின் இணையே காப்பாய் என்னை
கேஷம் முழுதும் மல்லிப்பூ சூடி
மணத்திடும் காளி என்றும் நீயே துணை

சித்ரா பௌர்ணமி நாயகியே
முழுமதி உந்தன் முகமம்மா
தேயாத புன்னகை உன் உதட்டிலம்மா
கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பா
நிறைமதி என்றும் நீயம்மா

பேசி பேசி உன் மடியில் நானும் தூங்கணும் தாயே
ஆசி தந்து ஆத்தா நீயும் ஆனந்தமா வாழவைக்கணும் நீயே
மாசில்லாத புனிதமே மானிடர்கெல்லாம் தெய்வமே
பாசி மலை வாசனையும் உச்சிமலை நாயகனையும்
ஈன்று எங்களுக்கு தாயானவளே

சித்ரா பௌர்ணமி நாயகியே
முழுமதி உந்தன் முகமம்மா
தேயாத புன்னகை உன் உதட்டிலம்மா
கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பா
நிறைமதி என்றும் நீயம்மா

முத்து போன்ற அழகோடு முத்து குடைகள்
மொத்த பேரும் சுத்துகிறோம் அத்தம் நாளில் பவனி

முத்து போன்ற அழகோடு முத்து குடைகள்
மொத்த பேரும் சுத்துகிறோம் அத்தம் நாளில் பவனி

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here