Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே… பாடல்

கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே ஜெய் பவானி ஜெகமாளும் பவானிஜெய் பவானி ஜெயம் தரும் பவானி நல்லகாலம் வந்தது என்று...
HomeSongsகருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே... பாடல்

கருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே… பாடல்

கருமாரி கருமாரி காவல் தெய்வமே
வணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே

கருமாரி கருமாரி காவல் தெய்வமே
வணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே

ஜெய் பவானி ஜெகமாளும் பவானி
ஜெய் பவானி ஜெயம் தரும் பவானி

நல்லகாலம் வந்தது என்று சொல்லியே
நாட்டில் உள்ளோரெல்லாம் நாடி வர
பொல்லாத காலமெல்லாம் ஓடி போனதம்மா
உன் சன்னதி தேடி வர
நீ வந்திறங்கும் போது மனமெல்லாம் குளிர
நீ வந்து நிற்கும் போது கண்ணெல்லாம் மிளிர
ஆத்தா ஆத்தா என்று நாவெல்லாம் சொல்ல
ஆடி வந்திடம்மா நீ ஆடி வந்திடம்மா
எங்க தாயம்மா பாட்டத்தற பத்ரகாளியம்மா

கருமாரி கருமாரி காவல் தெய்வமே
வணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே

ஜெய் பவானி ஜெகமாளும் பவானி
ஜெய் பவானி ஜெயம் தரும் பவானி

கையிரண்டும் சங்கிலியால் பிணைபட்டாலும்
கரங்களோ கும்பிட மறப்பதில்லை
காலிரண்டை கயிற்றால் கட்டி போட்டாலும்
கால்கள் தடம் மறப்பதில்லை
கண்ணை காலன் ஒளி மறைத்தாலும்
வழியை விழிகள் மறப்பதில்லை

கருமாரி கருமாரி காவல் தெய்வமே
வணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே

ஜெய் பவானி ஜெகமாளும் பவானி
ஜெய் பவானி ஜெயம் தரும் பவானி

கோயில்கள் நூறு கட்ட ஆசை
வாயில்கள் ஆயிரம் இருக்க ஆசை
கோயில் தோறும் கும்பிட ஆசை
வாயில்தோறும் வந்து நிற்க ஆசை
பிச்சி மல்லிகை பன்னீரின் வாசம்
பிரியமானவளே உன் சன்னதியிலே
உந்தன் வாசமே எந்தன் சுவாசம்

கருமாரி கருமாரி காவல் தெய்வமே
வணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே

ஜெய் பவானி ஜெகமாளும் பவானி
ஜெய் பவானி ஜெயம் தரும் பவானி

ஜெய் பவானி ஜெகமாளும் பவானி
ஜெய் பவானி ஜெயம் தரும் பவானி

பிரபல பாடலாசிரியர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here