Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

பலராம அவதாரத்துடன் தொடர்புடைய முக்கிய கோயில்கள்

பலராம அவதாரத்துடன் தொடர்புடைய முக்கிய கோயில்கள் பலதேவ்ஜியு கோயில் – பலராமருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முக்கிய கோயில்களில் ஒன்று. தௌஜி மகாராஜ் கோயில் – கிருஷ்ணரின் அண்ணனான பலராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற தலம். ஜகந்நாதர் கோயில்...
HomeSongsகலைவாணி நின் கருணை தேன்மழையே... பாடல்

கலைவாணி நின் கருணை தேன்மழையே… பாடல்

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்.

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here