Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்… அதங்கோடு பாடல்

கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்மன்னா மணிவண்ணா உனை கண்டிட கஷ்டங்கள் தீரும்உபதேசம் செய்தாயே யுத்த களத்திலேஉலகனத்தையும் கட்டி வைத்தாய் உந்தன் சிரிப்பிலே ஆடாடி ஓடோடி வந்திடு கண்ணாஆனந்த கூத்தாடி விளையாடிடு கண்ணாஆராரோ...
HomeSongsஆயிரம் கண்ணுடையவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாகாளியே... பாடல்

ஆயிரம் கண்ணுடையவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாகாளியே… பாடல்

ஆயிரம் கண்ணுடையவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாகாளி
ஆனைமுகனை ஈன்றவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாசக்தி
ஆயிரம் நாமங்கள் கொண்டு அனைவரையும் அரவணைத்திடும் தாயே
ஆபரணம் இல்லாமலே உன் அழகை காண ஆயிரம் கண் வேணுமே

பக்தி தீயில் உழங்கின்றேன்
முக்தி தர ஓடிவாம்மா
பக்தி தீயில் உழங்கின்றேன்
முக்தி தர ஓடிவாம்மா

ஆதிபராசக்தி ஆனாம்பிகைநகர் உச்சித மகாசக்தி
அனுதினமும் நான் வருவேன் தயே உனை சுத்தி
ஆதிபராசக்தி ஆனாம்பிகைநகர் உச்சித மகாசக்தி
அனுதினமும் நான் வருவேன் தயே உனை சுத்தி

ஆயிரம் கண்ணுடையவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாகாளி
ஆனைமுகனை ஈன்றவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாசக்தி
ஆயிரம் நாமங்கள் கொண்டு அனைவரையும் அரவணைத்திடும் தாயே
ஆபரணம் இல்லாமலே உன் அழகை காண ஆயிரம் கண் வேணுமே

வேதாளம் வந்து பாதளம் கொண்டு சென்றாலும்
பூலோகம் வென்று எனை காப்பாயே
இரும்பு கோட்டைக்குள் அகப்பட்டாலும்
துரும்பாய் வந்து காத்து கரும்பாய் இனிப்பாயே
காற்றே போகாத இடத்திற்குள் நீயும்
வெளியாய் புகுந்து காலனை ஓட செய்வாயே

ஏற்றம் தருவாய் தாயே
ஏமாற்றம் தாராதே நீயே
ஏற்றம் தருவாய் தாயே
ஏமாற்றம் தாராதே நீயே

ஆதிபராசக்தி ஆனாம்பிகைநகர் உச்சித மகாசக்தி
அனுதினமும் நான் வருவேன் தயே உனை சுத்தி
ஆதிபராசக்தி ஆனாம்பிகைநகர் உச்சித மகாசக்தி
அனுதினமும் நான் வருவேன் தயே உனை சுத்தி

ஆயிரம் கண்ணுடையவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாகாளி
ஆனைமுகனை ஈன்றவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாசக்தி
ஆயிரம் நாமங்கள் கொண்டு அனைவரையும் அரவணைத்திடும் தாயே
ஆபரணம் இல்லாமலே உன் அழகை காண ஆயிரம் கண் வேணுமே

அலையாய் கலையாய் மலையாய் மகளாய் மாறி வருவாயே
அழியா அன்பை அமுதாய் வாரி தருவாயே
முக்கண்ணன் மாதவியே முத்தமிழும் தருவாயே
நித்தமும் பாடுகிறேன் உந்தன் நினைவில்
நிஜமாக காட்சி தந்து எனை ஏற்பாயே

தூயவளே குறை ஒன்றும் உன்னிடம் இல்லை
துணை எனக்கு நீ ஒருத்திதான் வேறில்லை
தூயவளே குறை ஒன்றும் உன்னிடம் இல்லை
துணை எனக்கு நீ ஒருத்திதான் வேறில்லை

குடும்பங்களின் காவல் தெய்வமே
பத்மநாபன் சோதரியே
முன்னாடி வந்தவளே
முன்னின்று காப்பவளே
குடும்பங்களின் காவல் தெய்வமே
பத்மநாபன் சோதரியே
முன்னாடி வந்தவளே
முன்னின்று காப்பவளே

ஆதிபராசக்தி ஆனாம்பிகைநகர் உச்சித மகாசக்தி
அனுதினமும் நான் வருவேன் தயே உனை சுத்தி
ஆதிபராசக்தி ஆனாம்பிகைநகர் உச்சித மகாசக்தி
அனுதினமும் நான் வருவேன் தயே உனை சுத்தி

ஆயிரம் கண்ணுடையவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாகாளி
ஆனைமுகனை ஈன்றவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாசக்தி
ஆயிரம் நாமங்கள் கொண்டு அனைவரையும் அரவணைத்திடும் தாயே
ஆபரணம் இல்லாமலே உன் அழகை காண ஆயிரம் கண் வேணுமே

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here