Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி… பாடல்

மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சிசித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குஅஷ்ட சக்தி மண்டபத்தில் குலம் காக்கும் மதுரை மீனாட்சிஊஞ்சல் மண்டபத்தில் நலன் காக்கும் மதுரை மீனாட்சிகிளிக்கூட்டு மண்டபத்தில் ஐஸ்வர்யம் தந்த மதுரை மீனாட்சிஆயிரங்கால் மண்டபத்தில்...
HomeSongsஅதங்கோடு கண்ணனை வணங்கிட வாங்கோ… அதங்கோடு பாடல்

அதங்கோடு கண்ணனை வணங்கிட வாங்கோ… அதங்கோடு பாடல்

அதங்கோடு கண்ணனை வணங்கிட வாங்கோ
ஆனந்தத்தை தந்து காத்திடுவாங்கோ
நாயகனாய் நடுநாயகனாய் அதங்கோடு சமஸ்தானத்தை அலங்கரிப்பவனே
நாலு சுற்றும் அன்னையர் கூட்டம் நடுவினிலே சங்கு நாத ஓசையிலே
புல்லாங்குழலோடு வலம் வரும் கண்ணா

தமிழுக்கு உயிர் தந்தவா
தமிழுக்கு உயிர் தந்தவனை தந்தவா
அரங்கேற்றம் செய்ய அரங்கனையும் கொண்டு வந்தவா

அதங்கோடு கண்ணனை வணங்கிட வாங்கோ ஆனந்தத்தை தந்து காத்திடுவாங்கோ

பாரினை காக்க பத்து அவதாரம் எடுத்தவா
பத்து தலை ராவணனையே அழித்து ஒழித்தவா
பளபளக்குது உந்தன் கொடிமரமே
முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வாசமே
உன்னை சுமந்திடும் கருடனும் இங்கே
வானத்தில் வட்டமிட்டு எட்டி பார்க்கிறான்
நந்தகோபன் பெற்றெடுத்த நந்த குமாரா
நந்தலாலா நந்தலாலா நந்த குமாரா
பாஞ்சாலியின் சகியே ஆண்டாளை ஆட்கொண்டவா
பாண்டுரங்கா பண்டரிநாதா பக்தர்கள் வாசா

கண்ணா கண்ணா முகுந்தா கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா
அதங்கோடு கண்ணனை வணங்கிட வாங்கோ ஆனந்தத்தை தந்து காத்திடுவாங்கோ

கோபியர்கள் கொஞ்சிடும் கோமள கண்ணனே
கோகுலத்தில் உனை சுற்றி மங்கையர் கூட்டம்
கோபியராய் மாற கூடும் பக்தர்கள் கூட்டம் கோடியில் நானும் ஒன்று எனை மறவாதே
என் இதயமே தாமரை பூவாக அதில் நீ குடியேற ஓடிவா
ஆலிலை பாலகன் அழகான தோற்றத்தில் அதங்கோடு கண்ணனாய் இருக்கின்றான்
ஆகாயம் முதலாம் பூலோகம் வரையில் ஆழிமழை கண்ணன் வசிக்கின்றான்

கண்ணா கண்ணா முகுந்தா கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா
அதங்கோடு கண்ணனை வணங்கிட வாங்கோ ஆனந்தத்தை தந்து காத்திடுவாங்கோ

ஒளிவிளக்கே என் வாழ்வில் ஒளியேற்ற வா
மணிவிளக்கே மங்காத ஒளிதர வா
முத்துக்கள் வைரங்கள் ஜொலி ஜொலிக்க
முத்தான கண்ணா ஆனந்த கண்ணா எங்கள் சொத்தே
விடாது என் மனம் இடைவிடாது உனை நினைக்குதே
விடாது எனை கை விடாது காப்பது உன் கடமையே
அரும்பு மலரும் துளசி இலையும் அழகா உன் கருமேனியை வருடிடுதே
பிறவிக்கு விருந்தே பிறவாமைக்கு மருந்தே பின்னாளிலும் இருந்து எனை காத்திடப்பா

கண்ணா கண்ணா முகுந்தா கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா
அதங்கோடு கண்ணனை வணங்கிட வாங்கோ ஆனந்தத்தை தந்து காத்திடுவாங்கோ

நாயகனாய் நடுநாயகனாய்
அதங்கோடு சமஸ்தானத்தை அலங்கரிப்பவனே

நாலு சுற்றும் அன்னையர் கூட்டம்
நடுவினிலே சங்கு நாத ஓசையிலே
புல்லாங்குழலோடு வலம் வரும் கண்ணா

தமிழுக்கு உயிர் தந்தவா
தமிழுக்கு உயிர் தந்தவனை தந்தவா
அரங்கேற்றம் செய்ய அரங்கனையும் கொண்டு வந்தவா

அதங்கோடு கண்ணனை வணங்கிட வாங்கோ
ஆனந்தத்தை தந்து காத்திடுவாங்கோ

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

அதங்கோடு கண்ணனை வணங்கிட வாங்கோ… அதங்கோடு பாடல் | Aanmeega Bhairav

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here