Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி… பாடல்

மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சிசித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குஅஷ்ட சக்தி மண்டபத்தில் குலம் காக்கும் மதுரை மீனாட்சிஊஞ்சல் மண்டபத்தில் நலன் காக்கும் மதுரை மீனாட்சிகிளிக்கூட்டு மண்டபத்தில் ஐஸ்வர்யம் தந்த மதுரை மீனாட்சிஆயிரங்கால் மண்டபத்தில்...
HomeSongsசித்தி கணபதி சிரித்துக் கொண்டு… அதங்கோடு பாடல்

சித்தி கணபதி சிரித்துக் கொண்டு… அதங்கோடு பாடல்

ஓம் என்னும் நாதனே ஓங்கார ரூபனே ஓயாது உன் நாமமே
சித்தி கணபதி சிரித்துக் கொண்டு நல்ல புத்தி தருகின்றான்
சிவசக்தி தந்த மகனாம் ஆலும் அரசும் புடைசூழ இருக்கின்றான்
பாவமெல்லாம் போக்கிடவே பானை வயிற்றை உடையவனே

நூறாண்டு கண்ட அதங்கோடு கண்ணனை வணங்கிட
நூறு ஜென்ம போதாதம்மா
தலை முறை தலைமுறையாக தலை வணங்கி நின்றிட
தலைமுறைக்கே வரம் தந்திடு கண்ணா
மயிலும் அங்கே ஆடுது கண்ணா குயிலும் உன் புகழ் பாடுது கண்ணா

சரண கோஷத்திற்கு வந்த இடையூறை மாற்ற
ஐயப்பன் இங்கே குடி கொண்டான்
மோகன கண்ணன் மோகினி வடிவிலே மகிஷியை அழிப்பதற்கு தந்த மகனே
பம்பையிலே குளிக்கையிலே பகவானை நினைக்கையிலே
பக்தியிலே உள்ளம் குளிருதய்யா

நூறாண்டு கண்ட அதங்கோடு கண்ணனை வணங்கிட
நூறு ஜென்ம போதாதம்மா
தலை முறை தலைமுறையாக தலை வணங்கி நின்றிட
தலைமுறைக்கே வரம் தந்திடு கண்ணா
மயிலும் அங்கே ஆடுது கண்ணா குயிலும் உன் புகழ் பாடுது கண்ணா

மயிலாடும் வேலவனே திருமுருகனே
மயிலாடும் பாறையிலே ஆடி தளர்ந்தவனே
வேலெடுத்து விளையாடும் முருகா முருகா
வேதனைகள் தீர்த்திட ஓடிவாய்யா
வண்ண மயிலேறி வள்ளியோடு துள்ளி வேலெடுத்து வருவது அழகய்யா

நூறாண்டு கண்ட அதங்கோடு கண்ணனை வணங்கிட
நூறு ஜென்ம போதாதம்மா
தலை முறை தலைமுறையாக தலை வணங்கி நின்றிட
தலைமுறைக்கே வரம் தந்திடு கண்ணா
மயிலும் அங்கே ஆடுது கண்ணா குயிலும் உன் புகழ் பாடுது கண்ணா

மாலையாக மணிமாலையாக நீலகண்டன் கழுத்திலே
இடை அலங்காரனாக கணிபதியின் வயிற்றிலே
பாலோடு மஞ்சளில் குளிக்கிறாய்
படையை நடுநடுங்க செய்து பக்தர்களை காத்திடும் படமெடுத்து ஆடும் நாகராஜா
மாய கண்ணனுக்கு குடை பிடித்து பள்ளி கொள்ள இடம் பிடித்தாயே

நூறாண்டு கண்ட அதங்கோடு கண்ணனை வணங்கிட
நூறு ஜென்ம போதாதம்மா
தலை முறை தலைமுறையாக தலை வணங்கி நின்றிட
தலைமுறைக்கே வரம் தந்திடு கண்ணா
மயிலும் அங்கே ஆடுது கண்ணா குயிலும் உன் புகழ் பாடுது கண்ணா

சுட்டெரிக்கும் சூரியனும் சுடாமல் இங்கே சூரியகாந்தி போலே சிரிக்கிறான்
சங்கடங்கள் தந்திடும் சனீஸ்வரனும் சல்லியத்தை நீக்கி காக்கிறான்
கல்வி தந்திடும் குருவோ அனைவருக்கும் குருவாகி ஞானத்தை தருகிறான்
அத்தனை பேரும் இங்கே அமர்ந்து கொண்டு அவரவர் பணி செய்வது நமது புண்ணியம்

நூறாண்டு கண்ட அதங்கோடு கண்ணனை வணங்கிட
நூறு ஜென்ம போதாதம்மா
தலை முறை தலைமுறையாக தலை வணங்கி நின்றிட
தலைமுறைக்கே வரம் தந்திடு கண்ணா
மயிலும் அங்கே ஆடுது கண்ணா குயிலும் உன் புகழ் பாடுது கண்ணா

நூறாண்டு கண்ட அதங்கோடு கண்ணனை வணங்கிட
நூறு ஜென்ம போதாதம்மா
தலை முறை தலைமுறையாக தலை வணங்கி நின்றிட
தலைமுறைக்கே வரம் தந்திடு கண்ணா

மயிலும் அங்கே ஆடுது கண்ணா
குயிலும் உன் புகழ் பாடுது கண்ணா
மயிலும் அங்கே ஆடுது கண்ணா
குயிலும் உன் புகழ் பாடுது கண்ணா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

சித்தி கணபதி சிரித்துக் கொண்டு நல்ல புத்தி தருகின்றான்… அதங்கோடு பாடல் | Aanmeega Bhairav

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here