கண்ணா என் மழலை மொழி உனக்கு கேட்குதா
குசேலனின் மனமொழி கேட்டு ஓடி வந்தவா
அழுது துடிக்க வேண்டாமே உனை கண்டிட
அழுது துடிக்க வேண்டாமே உனை கண்டிட
அமுதே கொழுந்தே என் கண்ணா கண்ணா
வேண்டாமப்பா மாயகண்ணா மாயவேலை
மனம் தாங்காதப்பா காட்டிடாதே மாயவேலை
வேண்டாமப்பா மாயகண்ணா மாயவேலை
மனம் தாங்காதப்பா காட்டிடாதே மாயவேலை
கண்ணா என் மழலை மொழி உனக்கு கேட்குதா
குசேலனின் மனமொழி கேட்டு ஓடி வந்தவா
அழுது துடிக்க வேண்டாமே உனை கண்டிட
அழுது துடிக்க வேண்டாமே உனை கண்டிட
அமுதே கொழுந்தே என் கண்ணா கண்ணா
சின்ன பிள்ளையாக நீ நிற்க எந்தன் கால்கள் வலிக்குது கண்ணா
உந்தன் கையில் இருக்கும் வெண்ணெய்யை கண்டால் எந்தன் நா இனிக்குது கண்ணா
கால் தடத்தை பார்க்கும் போது காவியம் நினைவிலே
காது இரண்டை காணும் போது குண்டலம் நினைவிலே
பள்ளி கொண்டது போதுமப்பா
துள்ளி களித்திட ஓடிவாப்பா
பள்ளி கொண்டது போதுமப்பா
துள்ளி களித்திட ஓடிவாப்பா
வேண்டாமப்பா மாயகண்ணா மாயவேலை
மனம் தாங்காதப்பா காட்டிடாதே மாயவேலை
கண்ணா என் மழலை மொழி உனக்கு கேட்குதா
குசேலனின் மனமொழி கேட்டு ஓடி வந்தவா
அழுது துடிக்க வேண்டாமே உனை கண்டிட
அழுது துடிக்க வேண்டாமே உனை கண்டிட
அமுதே கொழுந்தே என் கண்ணா கண்ணா
கருவிழி நிற மேனியனே பாற்கடலில் படுப்பவா
இருவிழிகள் போதவில்லை இன்னும் ஒரிரு விழி தந்திட வா
கொழுந்து துளசி மாலையிலே குழந்தையாக சிரிப்பவா
கொழுந்தே குலகொழுந்தே அதங்கோடு கண்ணா
பாடி துதிக்க வயது வேணுமா
உனை கண்டு வணங்க கைகள் வேணுமா
பாடி துதிக்க வயது வேணுமா
உனை கண்டு வணங்க கைகள் வேணுமா
வேண்டாமப்பா மாயகண்ணா மாயவேலை
மனம் தாங்காதப்பா காட்டிடாதே மாயவேலை
கண்ணா என் மழலை மொழி உனக்கு கேட்குதா
குசேலனின் மனமொழி கேட்டு ஓடி வந்தவா
அழுது துடிக்க வேண்டாமே உனை கண்டிட
அழுது துடிக்க வேண்டாமே உனை கண்டிட
அமுதே கொழுந்தே என் கண்ணா கண்ணா
மாட்டினை மேய்ப்பதற்கு இடையவனாக வந்த வா
பாட்டினை கேட்பதற்கு ஓடி வா கண்ணா
குழல் ஊதும் கண்ணனே குழந்தை என் குரல் கேட்குதா
நிழல் உன் திருவடியாக கண்ணன் கீதம் பாடுவேனே
மலையை தூக்கி பிடித்தவா மக்கள் எல்லோரையும் காத்தவா
உலையாக கொதிக்கும் என் மனதை ஆற்றிட
சிலையாக நிற்காமல் வந்திடு ஆனந்த நகர் கண்ணா
கண்ணா கண்ணா என்று நாமத்தை
காலமெல்லாம் சொல்லிடுவேன் அதங்கோடு கண்ணா
கண்ணா கண்ணா என்று நாமத்தை
காலமெல்லாம் சொல்லிடுவேன் அதங்கோடு கண்ணா
வேண்டாமப்பா மாயகண்ணா மாயவேலை
மனம் தாங்காதப்பா காட்டிடாதே மாயவேலை
கண்ணா என் மழலை மொழி உனக்கு கேட்குதா
குசேலனின் மனமொழி கேட்டு ஓடி வந்தவா
அழுது துடிக்க வேண்டாமே உனை கண்டிட
அழுது துடிக்க வேண்டாமே உனை கண்டிட
அமுதே கொழுந்தே என் கண்ணா கண்ணா
கண்ணா… கண்ணா…
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd