அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி
அகிலம் முழுதும் உனக்கு ஆலயம்
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி
நீ ஆளும் புவனம் முழுதும் பூங்காவனம்
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி
அகிலம் முழுதும் உனக்கு ஆலயம்
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி
நீ ஆளும் புவனம் முழுதும் பூங்காவனம்
என் பாடல் உனக்கு மலலராக
என் கீதம் உனக்கு திரியாக
உன் ஜோதி எனக்கு வழியாக
நான் போகின்ற பாதைக்கு துணையாக
வாம்மா வாம்மா பாலூர் பத்ரேஸ்வரி
ஓடும் காலம் ஓடும் வரையில் ஒண்ணாக நாம் இருக்க
நாம் ஒண்ணாக இருக்க
தேடும் கண்கள் தேடுவதோ உன் திருவடி ஆக
உன் திருவடி ஆக
மலரின் முள் கூட தைக்காமல் நீயும் பூவாக காத்திட
எனை பூவாக காத்திட
இதழின் மணம் போல காலமெல்லாம் நான் மணத்திட
உன் சன்னதியில் மணத்திட
என் பாடல் உனக்கு மலலராக
என் கீதம் உனக்கு திரியாக
உன் ஜோதி எனக்கு வழியாக
நான் போகின்ற பாதைக்கு துணையாக
வாம்மா வாம்மா பாலூர் பத்ரேஸ்வரி
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி
அகிலம் முழுதும் உனக்கு ஆலயம்
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி
நீ ஆளும் புவனம் முழுதும் பூங்காவனம்
அதிகாலை சூரியன் உதிப்பது முதல்
அந்திமாலை சந்திரன் சிரிப்பது வரை
உனை கண்டும் மனம் ஆறுதல் அடையவில்லை
சகலகலை தலைவியே பாலூர் பத்ரேஸ்வரியே
நீ அணிந்த புடவையிலும் நல்ல மணமுண்டு
உன் பிள்ளை எங்களுக்கும் நல்ல மனமுண்டு
என் பாடல் உனக்கு மலலராக
என் கீதம் உனக்கு திரியாக
உன் ஜோதி எனக்கு வழியாக
நான் போகின்ற பாதைக்கு துணையாக
வாம்மா வாம்மா பாலூர் பத்ரேஸ்வரி
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி
அகிலம் முழுதும் உனக்கு ஆலயம்
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி
நீ ஆளும் புவனம் முழுதும் பூங்காவனம்
சுத்தி வரும் கோள்கள் எல்லாம் உன்னை சுத்த
மொத்த உலகம் உன் அழகை கண்டு சொக்கி நிக்க
சுத்த காற்றும் உன்னை சுற்றி வீசுது
நீ சுவாசிப்பதற்கு வழி தேடுது
சிம்மாசனத்தில் சிம்மவாஹினி நீயும்
சிவகாசி மத்தாப்பு போல் சிரிகிறாய்
என் பாடல் உனக்கு மலலராக
என் கீதம் உனக்கு திரியாக
உன் ஜோதி எனக்கு வழியாக
நான் போகின்ற பாதைக்கு துணையாக
வாம்மா வாம்மா பாலூர் பத்ரேஸ்வரி
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி
அகிலம் முழுதும் உனக்கு ஆலயம்
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி
நீ ஆளும் புவனம் முழுதும் பூங்காவனம்
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd