Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கரும்பை கையில் ஏந்தி கமலத்தில் அமர்ந்தாயே பாலவிளையிலே…. பாடல்

கரும்பை கையில் ஏந்தி கமலத்தில் அமர்ந்து கொண்டுகாஞ்சி காமாட்சி பாலவிளையிலேகறுப்பு மேனிக்குள்ளே கனிந்த இதயத்தோடுகாசி விசாலாட்சி பாலவிளையிலே கரும்பை கையில் ஏந்தி கமலத்தில் அமர்ந்து கொண்டுகாஞ்சி காமாட்சி பாலவிளையிலேகறுப்பு மேனிக்குள்ளே கனிந்த இதயத்தோடுகாசி விசாலாட்சி...
HomeSongsசம்போ மஹாதேவா பாலவிளை தாணுமாலயா... பாடல்

சம்போ மஹாதேவா பாலவிளை தாணுமாலயா… பாடல்

சம்போ மஹாதேவா தாணுமாலயா
சங்கடங்கள் தீர்த்திடுவான் தாணுமாலயா
சம்போ மஹாதேவா தாணுமாலயா
சங்கடங்கள் தீர்த்திடுவான் பாலவிளை தாணுமாலயா

விளையாடாதே
விளையாடாதே விதி எனும் விளையாட்டை
என்னிடம் விளையாடாதே
விளையாடாதே
விளையாடாதே விதி எனும் விளையாட்டை
என்னிடம் விளையாடாதே

ஓம் நமச்சிவாய என்று நான் சொல்ல வேணும்
ஓம் நமச்சிவாயனே நீ எனை ஆள வேணும்
கட்டி அணைத்திட தோணுது சிவனே காட்சி தர வருவாயா
எட்டி பிடிக்க துடிக்குது மனசு சிவனே காட்சி தர வருவாயா

சிவம் சிவம் அதுவே பரம் பரம்
சிவம் சிவம் அதுவே பலம் பலம்

சம்போ மஹாதேவா தாணுமாலயா
சங்கடங்கள் தீர்த்திடுவான் தாணுமாலயா
சம்போ மஹாதேவா தாணுமாலயா
சங்கடங்கள் தீர்த்திடுவான் பாலவிளை தாணுமாலயா

ருத்திராட்சம் கழுத்தினில் ஆட பக்தி மட்டும் போதாதா
சந்திர பிறையும் தலையில் சூட சக்தி மட்டும் போதாதா
கழுத்தினில் நஞ்சும் நெஞ்சிலில் அன்பும் கொண்ட நாதா
பிறப்பினில் உண்டோ உயர்வு தாழ்வு சொல்லிடு நாதா

சிவம் சிவம் அதுவே பரம் பரம்
சிவம் சிவம் அதுவே பலம் பலம்

சம்போ மஹாதேவா தாணுமாலயா
சங்கடங்கள் தீர்த்திடுவான் தாணுமாலயா
சம்போ மஹாதேவா தாணுமாலயா
சங்கடங்கள் தீர்த்திடுவான் பாலவிளை தாணுமாலயா

பாம்பு தலைவன் வாசுகியோ உந்தன் கழுத்திற்கு மாலையாக
வேம்பு சூடும் தேவகியோ உந்தன் இடபுறம் துணையாக
ஆலகாலம் உண்டவனே அகில உலகமும் ஆள்பவனே
யாரும் இல்லை எனை காத்திடவே ஆதிமூலனே வந்திடுவாய்

சிவம் சிவம் அதுவே பரம் பரம்
சிவம் சிவம் அதுவே பலம் பலம்

சம்போ மஹாதேவா தாணுமாலயா
சங்கடங்கள் தீர்த்திடுவான் தாணுமாலயா
சம்போ மஹாதேவா தாணுமாலயா
சங்கடங்கள் தீர்த்திடுவான் பாலவிளை தாணுமாலயா

சிவம் சிவம் அதுவே பரம் பரம்
சிவம் சிவம் அதுவே பலம் பலம்

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here