Type Here to Get Search Results !

கிள்ளியூர் சிவனே உனை பாட பாட... பாடல்

பிராட்டீஸ்வரா… எங்கள் பிராட்டீஸ்வரா…
பிராட்டீஸ்வரா… எங்கள் பிராட்டீஸ்வரா…

கங்கையை தலையில் சூடிக்கொண்டு
கங்காதரா காளை மீதேறி துள்ளி வா
மங்கையை இடபுறம் இருத்திக்கொண்டு
ஜடாதரா சூலம் ஏந்தி எமை ஆள வா

கிள்ளியூர் சிவனே உனை பாட பாட
சிவனே உனை நினைக்க நினைக்க
வாயெல்லாம் பாடி பாடி இனிக்குது
மனமெல்லாம் நினைந்து நினைந்து களிக்கிறது

பிராட்டீஸ்வரா… எங்கள் பிராட்டீஸ்வரா…
பிராட்டீஸ்வரா… எங்கள் பிராட்டீஸ்வரா…

கங்கையை தலையில் சூடிக்கொண்டு
கங்காதரா காளை மீதேறி துள்ளி வா
மங்கையை இடபுறம் இருத்திக்கொண்டு
ஜடாதரா சூலம் ஏந்தி எமை ஆள வா

சந்தியின் சக்தியே முக்தி தந்திடு
பக்தியின் யுக்தியே சித்தி தந்திடு
என்னென்னவோ என்னை சுத்தி நடக்கையிலே
எல்லாம் நீ தந்ததென மனம் நினைக்கையிலே

சுகமே… நலமே… சிவனே…
சுகமே… நலமே… சிவனே…

ஆதி நாதனே அம்மை அப்பனே
சாதி இல்லையே யாவரும் சமமே
போதித்தவா கைலாய நாதா சிவனே

பிராட்டீஸ்வரா… எங்கள் பிராட்டீஸ்வரா…
பிராட்டீஸ்வரா… எங்கள் பிராட்டீஸ்வரா…

கங்கையை தலையில் சூடிக்கொண்டு
கங்காதரா காளை மீதேறி துள்ளி வா
மங்கையை இடபுறம் இருத்திக்கொண்டு
ஜடாதரா சூலம் ஏந்தி எமை ஆள வா

சிக்கென பிடிப்பவர்க்கு சீக்கிரத்தில் அருள்
தத்துவ பொருளோனே தந்திடுவாய் புகழ்

பொன்னெல்லாம் போகமப்பா பொருளெல்லாம் வேணாமப்பா
என் உசுரெல்லாம் நீயப்பா உன் காலடி வேணுமப்பா
இடரினில் காத்து தளரினில் தாங்கி
இமைக்குள் எனை வைத்து மூடிடப்பா

பிராட்டீஸ்வரா… எங்கள் பிராட்டீஸ்வரா…
பிராட்டீஸ்வரா… எங்கள் பிராட்டீஸ்வரா…

கங்கையை தலையில் சூடிக்கொண்டு
கங்காதரா காளை மீதேறி துள்ளி வா
மங்கையை இடபுறம் இருத்திக்கொண்டு
ஜடாதரா சூலம் ஏந்தி எமை ஆள வா

கிள்ளியூர் சிவனே உனை பாட பாட
சிவனே உனை நினைக்க நினைக்க
வாயெல்லாம் பாடி பாடி இனிக்குது
மனமெல்லாம் நினைந்து நினைந்து களிக்கிறது

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.