தட்டட்டும் தட்டட்டும் மிருதங்கம் தட்டட்டும்
ஊதட்டும் ஊதட்டும் நாதஸ்வரம் ஊதட்டும்
ஒலிக்கட்டும் ஒலிக்கட்டும் மேளங்கள் ஒலிக்கட்டும்
பாறையடி இசக்கி கேட்டு ரசிக்க பாட்டு கேட்க வந்திடம்மா
பாறையடி இசக்கி கேட்டு ரசிக்க பாட்டு கேட்க வந்திடம்மா
தட்டட்டும் தட்டட்டும் மிருதங்கம் தட்டட்டும்
ஊதட்டும் ஊதட்டும் நாதஸ்வரம் ஊதட்டும்
ஒலிக்கட்டும் ஒலிக்கட்டும் மேளங்கள் ஒலிக்கட்டும்
மஞ்சள் பால் கொதிக்கையிலே சுத்தி சுத்தி வந்திடுவா
ஆத்தா அவ மகிழ்ச்சியினை முகத்திலே கண்டிடலாம்
கமுகம் பூவை கையிலேந்தி குழந்தையாக சிரிப்பாளே
கலகலக்கும் வளையல் சத்தத்திற்கு மயங்கி நிப்பாளே
பாறையடி இசக்கி பிள்ளை வரம் தந்திடுவா
தொட்டில் பிள்ளை கட்டி கும்பிடுங்க
தொட்டிலிலே குழந்தையாக ஆத்தா
படுத்திருக்கும் அழகோ ஆத்தா
தொட்டிலிலே குழந்தையாக ஆத்தா
படுத்திருக்கும் அழகோ ஆத்தா
தட்டட்டும் தட்டட்டும் மிருதங்கம் தட்டட்டும்
ஊதட்டும் ஊதட்டும் நாதஸ்வரம் ஊதட்டும்
ஒலிக்கட்டும் ஒலிக்கட்டும் மேளங்கள் ஒலிக்கட்டும்
தேங்காய் பாலோ எண்ணெய்யாக மாற
பசும்பாலில் குளிப்பது போல் களித்திடுவா
அம்மா நீ புவி வாழும் ஜீவர்க்கெல்லாம் தாயம்மா
அன்னையர்களுக்கெல்லாம் நீயே என்றும் சேயம்மா
சண்டி தனம் செய்பவரை இசக்கி பாத்திடுவா
மண்டி இட்டு வணங்குபவரை இசக்கி காத்திடுவா
சிவந்த குங்குமம் சிவப்பு ஆடை
நீ வருவதை காட்டுது பிச்சி பூ வாடை
தட்டட்டும் தட்டட்டும் மிருதங்கம் தட்டட்டும்
ஊதட்டும் ஊதட்டும் நாதஸ்வரம் ஊதட்டும்
ஒலிக்கட்டும் ஒலிக்கட்டும் மேளங்கள் ஒலிக்கட்டும்
பாறையடி இசக்கி கேட்டு ரசிக்க பாட்டு கேட்க வந்திடம்மா
பாறையடி இசக்கி கேட்டு ரசிக்க பாட்டு கேட்க வந்திடம்மா
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd