Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

அய்யா சீசருக்குச்சொன்ன சிவகாண்ட அதிகாரப்பத்திரம்

அய்யா சீசருக்குச்சொன்ன சிவகாண்ட அதிகாரப்பத்திரம்—————————————————— அழிவுகள் விவரம் பெருங்காற்றினால் அழிவு வெள்ளத்தால் அழிவு பேய்மாறட்டத்தால் அழிவு பெருஞ்சுரத்தால் அழிவு சம்மாரியால் அழிவு காளிவெள்ளத்தால் அழிவு நஞ்சுதின்று கொலைப்பட்டழிவு பெண்ணாலே ஆணழிவு ஆணாலே பெண்அழிவு பூமிதரும் ஓசையினால் ஒருபெருமூச்சு உண்டாகும் இப்படி பற்பல தீர்ப்புக்கேட்க நாராயணம்ட நாவில் வகுத்துக் சொன்னோம் அருளாக ஏகம்அண்ட பரிபூரணமாய் வரையாகி...
HomeSpiritualityஅய்யாவைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை காப்பு

அய்யாவைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை காப்பு

ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி
காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க – பூரணமாய்
ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்
.
பாண்டவர் தமக்காய்த் தோன்றி
பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த
விசளத்தால் கயிலை யேகி
சான்றவர் தமக்கா யிந்தத்
தரணியில் வந்த ஞாயம்
ஆண்டவர் அருளிச் செய்ய
அம்மானை எழுத லுற்றேன்
.
சிவமே சிவமே சிவமணியே
தெய்வ முதலே சிதம்பரமே
தவமே தவமே தவக்கொழுந்தே
தாண்டவசங் காராதமியே எங்களுட
பவமே பவமே பலநாளுஞ்
செய்த பவம றுத்தன்
அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய்
சிவசிவசிவசிவா அரகரா அரகரா
.
அலையிலே துயில் ஆதிவராகவா
ஆயிரத்தெட் டாண்டினில் ஓர்பிள்ளை
சிலையிலே பொன்மகர வயிற்றினுள்
செல்லப்பெற்றுத் திருச்சம் பதியதில்
முலையிலே மகரப்பாலை யுமிழ்ந்துபின்
உற்றதெச்சண மீதில் இருந்துதான்
உலகில் சோதனை பார்த்தவர்
வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே
.
திருமொழி சீதை யாட்குச்
சிவதலம் புகழ எங்கும்
ஒருபிள்ளை உருவாய்த் தோன்றி
உகபர சோதனைகள் பார்த்துத்
திருமுடி சூடித் தர்மச்
சீமையில் செங்கோ லேந்தி
ஒருமொழி யதற்குள் ளாண்ட
உவமையை உரைக்க லுற்றார் – அகிலம் !
.

காப்பு உரை விளக்கம்.
அங்கிங்கெனாதபடி எங்கும் ஏகமாய் அனாதித் திருவுளமாக நிறைந்து, ஆழமாக அகழ்ந்து, அண்ட சராசரங்களையெல்லாம் படைத்து, அதனை அடுக்கடுக்காக ஒழுங்குறக் கோத்துப் பண்பட்ட அழகுடன் ஆபரணமாகப் பூண்டு கொண்டிருக்கும் இறைவன், இந்த மண்ணகத்தில் தவமிருந்து, தம்முடைய புராதனப் பிரதான அடிப்படை நோக்கக் கைங்கரியங்களை யெல்லாம் அறுதியிட்ட முழு வரலாற்றுச் செய்யுளாக வடித்து ஓதுகிறார்.
.
அந்த ஆத்தும பூப்பாதங்கள், அடியேனின் நாவில் நின்று நர்த்தனம் புரிவதால், அடியேனின் சிந்தையில் பூத்த சொற்கள் தமிழன்னையின் தளிர்ப்பூங் கழுத்தில் அணிகலனாக மின்னுகிறது.
.
துவாபரயுகத்தில், பஞ்சபாண்டவர்களிடம் நாட்டை அபகரித்து, ஆண்டுகொண்டிருந்த கௌரவர்களைப் அழித்து, நீதி வழுவாத நெறியுடன் வாழ்ந்த பாண்டவர்களை நாடாள வைத்த பிரபஞ்சகர்த்தன், விரும்பத்தகாத நீசனோடு உதித்த கலியுகத்தால் கவலைகொண்டு கைலைக்குச் சென்று, மீண்டும் கலியுகத்தில் தம்மைச் சார்ந்தவர்களுக்கெல்லாம் கதிமோட்சம் கொடுப்பதற்காக இந்தப் பூவுலகத்திற்கு எழுந்தருளிய நியதிகளை அவரே அடியேனுக்கு அனுக்கிரகம் செய்ததின் விளைவாக இந்த அகிலத்திரட்டு அம்மானையாகிய ஆகமத்தை எழுதத் தொடங்குகிறேன்.
.
உலகம் யாவுக்கும் உயிராகி, அவ்வுலகம் இயங்கும் பொருட்டு தில்லையம்பதியில் நின்று திருத்தாண்டவம் புரியும் சிவபெருமானே! தெய்வங்களுக்கெல்லாம் முழுமுதற் பொருளான தத்துத் திளந்தளிரே! உலக வாழ்வுக்கும், அழிவுக்கும் காரணமாகி அனைத்துப் பாவங்களையும் சமகரிக்கும் சர்வேஸ்வரா! நாங்கள் பல நாள்களாக இப்புவியில் செய்து கொண்டிருக்கும் பாவங்களையெல்லாம் கழுவி, உன் அகமே வைத்து எங்களை ஆட்கொள்ளுவாய்.
.
சிவன், அரன் எனப் பெயர்கொண்ட பராபரமே! அலைகடலை படுக்கையாகக் கொண்ட ராகவா, முன்பொருகால் வையகத்தை மீட்ட வராகமாகத் தோன்றிய வள்ளலே, கொல்லம் ஆண்டு 1008ல் தேவருலகமாகிய பொன் மகர அரங்கினுள் ஒரு பிள்ளை வடிவாகி, திருச்சம்பதியில் ஞானச் சுரபியாகிய நின் நிதான விருப்பங்களையெல்லாம் விஞ்சையெனக் கொப்பளித்து, பின்பு சிறப்பு பொருந்திய தெட்சணாபுரிக்கு எழுந்தருளி உலகப் பரிபாலனம் செய்த நின் ஒப்பரிய சூட்சுமச் செய்திகளையெல்லாம் இந்த உலகுக்கு நின் அருளால் எடுத்தியம்புவதை இந்த யுகத்திற்கு உகந்த தர்மமாகப் பெற்றோம்.
பாக்கியம் பதினாறுமாக இருந்தியங்கும் சீதாலட்சுமி தேவிக்கு, கைலேங்கிரி முதலான அனைத்து லோகங்களிலும் கீர்த்தி பெறத்தக்க ஒரு பிள்ளை உருவாக வைகுண்டமெனத் தோன்றிய இறைவன். இந்தக் கலியுகத்தின் பரிசோதனைகளையெல்லாம் நிறைவேற்றிய பின்பு, இவ்வுலகை தர்மச்சீமையாக்கி, தர்மச் செங்கோலுடன் மகுடம் தரித்த மன்னனாக, தம் ஒரு சொல்லுக்குள் இந்த உலகை ஆளவிருக்கும் அற்புதங்களை எல்லாம் அலங்கார வார்த்தைகளோடு அறிவிக்க அருள்பாலிக்கிறார்.
.
அய்யா உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here