Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

அய்யா சீசருக்குச்சொன்ன சிவகாண்ட அதிகாரப்பத்திரம்

அய்யா சீசருக்குச்சொன்ன சிவகாண்ட அதிகாரப்பத்திரம்—————————————————— அழிவுகள் விவரம் பெருங்காற்றினால் அழிவு வெள்ளத்தால் அழிவு பேய்மாறட்டத்தால் அழிவு பெருஞ்சுரத்தால் அழிவு சம்மாரியால் அழிவு காளிவெள்ளத்தால் அழிவு நஞ்சுதின்று கொலைப்பட்டழிவு பெண்ணாலே ஆணழிவு ஆணாலே பெண்அழிவு பூமிதரும் ஓசையினால் ஒருபெருமூச்சு உண்டாகும் இப்படி பற்பல தீர்ப்புக்கேட்க நாராயணம்ட நாவில் வகுத்துக் சொன்னோம் அருளாக ஏகம்அண்ட பரிபூரணமாய் வரையாகி...
HomeSpiritualityஅய்யா சீசருக்குச்சொன்ன சிவகாண்ட அதிகாரப்பத்திரம்

அய்யா சீசருக்குச்சொன்ன சிவகாண்ட அதிகாரப்பத்திரம்

அய்யா சீசருக்குச்சொன்ன சிவகாண்ட அதிகாரப்பத்திரம்
——————————————————

அழிவுகள் விவரம்

பெருங்காற்றினால் அழிவு

வெள்ளத்தால் அழிவு

பேய்மாறட்டத்தால் அழிவு

பெருஞ்சுரத்தால் அழிவு

சம்மாரியால் அழிவு

காளிவெள்ளத்தால் அழிவு

நஞ்சுதின்று கொலைப்பட்டழிவு

பெண்ணாலே ஆணழிவு

ஆணாலே பெண்அழிவு

பூமிதரும் ஓசையினால் ஒருபெருமூச்சு உண்டாகும்

இப்படி பற்பல தீர்ப்புக்கேட்க

நாராயணம்ட நாவில் வகுத்துக் சொன்னோம்

அருளாக ஏகம்அண்ட பரிபூரணமாய்

வரையாகி திரையாகி வான்புவி லோகமுமாய்

ஒளியாகி விழியாகி உயிருக்கிணையாகி

திருவுயிராய் ஒருவுயிராய் தேசத்தில் வேசமுமாய்

ஒன்றாகி இரண்டாகி உலகமெங்கும் நானாகி

ஒன்றுமிரண்டும் மூன்றும் நாலாய் அஞ்சாய்

உனைவகுத்தேன் அஞ்சி அடங்கி ஆதிபரன்

பங்காளன் அஞ்சிரெண்டு மூன்றானே னிந்த

ஆதிபரன் சித்து வித்தை மண்ணால்

உனைமனைந்து பலமாய் கையினால் உனைவகுத்தேன்

உந்தன் பலங்குலைக்க உலகில்பெண்ணை வகுத்துவிட்டேன்

உண்டாக்கிவைப்பதுநான் உலகில்அழிப்பதும் நான்மகனே

ஏகமதாய் நிறைந்தபரன் இருந்துலகை அளுகிறார்

கண்ணுமக் காள்என் சூத்திரத்தைக்

கண்டறிந்து பாருங்கப்பா

பதிமூன்றுக் குள்ளிருந்து பாடுகிறேன் சிவகாண்டம்

இரவுபகல் வேலைசெய்தாலும் யீசன்வேலை முடியாதப்பா

இருபத்தி மூன்றுதெய்வம் யீசனெங்கும் வடிவானேன்

இருமூன்று தனியுகங் ஈடளித்த மாயனப்பா

இருபத்தி நாலாயுகம் இருந்துபுத்தி சொல்லுகின்றேன்

இருபத்தி ஐந்தாயுகம் எழுந்திருந்து வந்தேனப்பா

ஐம்பதிக்குள் அதிசயம் தான் அறிந்திருங்கோகண்ணுமக்காள்

குடியிருந்து ஐந்துயுகம் கொள்ளிவைத்து போறேயனப்பா

ஒன்றிரண்டு ஐந்துக்குள்ளே உலகடக்கி அரசாள்வீர்

இன்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி சொல்லுகிறேன்

இருபத்திரண்டு காரணம்ஈசன்சொன்னேன் சிவகணக்கு

மூன்றுபத்து இரண்டறம்நான் வளர்த்தேன் கலியுகத்தில்

நாள்தோறும் மிரண்டுஅறம் நாதன்வேலை செய்தாலும்

அதற்கு தண்ணீர் ரதுதான்கொடுப்பா ரில்லையப்பா

அண்டத்திலோரம் தான்நாதன் சொல்லுகிறேன் தப்பாது

அண்டபகிரண்டம்வெல்லவொரு ஆயுதம்வந்திருக்குதப்பா

இட்டவாளுக்கிரையாக இருக்கிறார் சத்துருக்கள்

திருச்சம்பதி அழியுதடா திருமாலுஞ் சொல்லுகிறேன்

எட்டுத்திசை வட்டக்கோட்டை கட்டுமுட்டாயிருக்குதடா

மச்சமுனி நானுமப்பா மாயச்சொருபமறிவாயோ

ஊமையானேன் செவிடானேன்

பித்தனானேன் பேயனானேன்

என்பெருமையெங்கும் அறிவாரில்லை

மண்டலத்துப்பெண்மாய்கையாக மாலயனும் நானானேன்

கள்ளனானேன் வெள்ளனானேன் என்காரணத்தைஅறிவாரில்லை

ஆலிலை மேல்பள்ளிகொண்ட அருமைசற்றேசொல்வாரில்லை

வாரிதனை யடைத்தஅருமை சற்றுமில்லை யென்மகனே

அண்டமெலாம் பிண்டமதாய்

ஐந்தறைக்குள் அடக்கிவிட்டேன்

கடலை அடைத்ததினால் உங்கள் கண்மயங்கலாச்சுதப்பா

நான்எந்நாளும் பள்ளிகொண்டுஇருப்பதை நீயறியவில்லை

அமிர்தமது தான்கடைந்த அதிசயத்தைச் சொல்மகனே

ஆயர்பாடி ஊர்தனிலே ஆயருட பட்டணத்தில்

ஒருபதினென்னாணியித்து ஏற்றபெண்கள் தங்கள்முன்னே

மாப்பிள்ளையா நானிருந்த மாயச்சித்தை சொல்மகனே

எண்ணிடங்காபெண்களுக்கு இருக்கிறேன் மாப்பிள்ளையாய்

ஐந்துதலை நாகத்தின்மேல் ஐயாபள்ளி கொள்வதியல்லையா

பத்தவதாரம்பிறந்த பாதைகளைச் சொல்மகனே

என்னையறியாமல் ஏதும்வகை உலகிலில்லை

தன்னையறித்ததுண்டால் தலைவனைநீயறிவாய்மகனே

கண்ணால்மனக்கண்ணாலே காணுமப்பா வழியதுதான்

என்னை யறிந்தவர்க்கு ஈசன்வழி சொல்லுகிறேன்

உங்களுக்குமண்ணில் மூவாசையதுமாற்றானாய் இருக்குதடா

வட்டக்கோட்டைக்க காட்டுக்குள்ளே நட்டுவனார்கொட்டுகிறார்

சூத்திரக்கணக்கென்று சொல்லுகிறேன் கேள்மகனே

பஞ்சவர்ணக்கிளி கிளியொன்றிருந்தது

பறந்துபோகக் கண்டேனடா

ஏழுபெண்கள்கதையை எடுத்துச்சொல்ல நாளாச்சே

பாம்புச்செடிக்குள்ளிருந்த பாம்பு படம்விரித்து ஆடுதடா

ஈரேழுஉலகமுண்டு இதையெடுத்துச்சொல்வார் யார்மகனே

சாதியான கொடியபாம்பு சதிசெய்யும் பாம்பதுதான்

முப்பூவை தானெடுத்து

அதைமுத்திசெய்தால் சக்தியுண்டு

குருபுத்தி யார்க்கும் உள்ளதைநான்

சொல்வேன் கேள்மகனே

அப்பூவைத்தானெடுத்து அணிந்திடுங்கோ கண்ணுமக்காள்

மூன்றுநாமம் ஒன்றுபாம்பு

அதுமூன்றும் ஆடுதப்பா

கொத்தினால் திரும்பாதப்பா

அதுகுடிகெடுத்தப் பாம்புவிசம்

தலைமன்னர் மீதிருந்து பலசாஸ்திரங்கள் சொல்லுதப்பா

சங்குக்குள்ளிருந்து வந்தேன் வையகத்தில்

கும்பக்கோணப்பாதையாக குறிகள்சொல்லி வந்தேனப்பா

விள்ளுர் தனிலிருந்து விரைத்துவந்தேன் வையகத்தில்

ஏகன்போக னப்பாநான்

இருப்பதை அறிவாரில்லை

கருவூர்தனிலிருந்து கனவருத்தப் பட்டுவந்தேன்

பாலன் சிறுகுழந்தை வந்தபாதையறிவீர்மக்காள்

உங்களுக்கு வேலைசெய்ய நான்

உலகில்வந்தேன் கண்ணுமக்காள்

இருமனதா லெண்ணாதே பின்

எனக்குஉத்தரம் சொல்வாயn

மருந்துவாழ் மாமுனிவன் மாயசாலக் காரனும்நான்

நாடெல்லாம் பாடியாச்சே

நாதனென்ன செய்வேனப்பா

வேலை செய்தால் வினையில்லையே

அந்த விசமதுதான் அனுகாதப்பா

மந்திரத்தால் தந்திரத்தால் மாரணத்தால் தீர்ந்திடுமோ

எல்லோர்க்கும் கோடிப்பாம்பு இருக்குதப்பா சத்துருவாய்

நல்லோரைத் தீண்டாது நாதனிங்கேசொல்லுகிறேன்

முச்சந்திக்குள்ளிருந்துபாம்பு உச்சம்பெற்று வருகதப்பா

ஆவென்று அழுதாலும் அருந்தவப்பட்டாலும்

கூவென்று அழுதாலும் கொத்திவிடும் அப்பாம்பு

ஆணும்பெண்ணும் கூட்டியாட்டி

ஆக்கிவைக்க நான்வருவேன்

நாலுவகைக்கணக்கிலும் நான்தீர்ப்புச்செய்ததுண்டு

செம்பவளத்தேரறி

நான்தேசமெல்லாம் பார்க்கவாறேன்

வம்புவசை அதிகமப்பா வகையறியாமல் மயங்குகிறார்

ஆங்காரம்அடிபிடிகள் அதிகமச்பாதேசமெங்கும்

கொலைகளவு அதிகமப்பா குடிகேடுஆச்சுதப்பா

பெண்ணாலெஆண் அழிவு பெருகுமடாபூமியெங்கும்

ஆணும்பெண்ணும் அழிவாகும் அம்பலத்ரசர் முடிவாகுதடா

வறுமையதுதான் பெருத்து நீங்கள்வழிதப்பிப்போவீர்களே

பொய்புரட்டு அதிகமப்பா பொருத்தல்லைமிகலிநமக்கு

தானமானமில்லையப்பா சாதிவரம்பழியுதடா

சங்கக்கூட்டம் இல்லையாடா சரசக்கூட்டம் இக்கலியில்

கொம்பன்புழு வென்றறியாமல் குதிபோடுகிறார்கலியில்

மக்களுக்கு உத்தரவு மால்சொல்ல நீதிஉண்டே

அறிவுசொல்லி தெளிவுதர

நான்அம்பலத்தில் கணக்கர்வைத்தேன்

நான்வைத்த கணக்கரெல்லாம் நன்றுநடுக்கேட்கவில்லை

ஆடிநன்றாய் பாடிநன்றாய் கொடுக்கவில்லை என்மகனே

ஆதிபரன் சோதிநாதன் அதிகாரம்செய்யவாறேன்

புத்தியினால் கெட்டவரே பிழைக்கமதிதேடுங்கப்பா

அதிகாரசச்சட்டமது அவனியெங்கும் ஆகுதப்பா

பத்திரத்தைப்பாடிவந்தாலும் பாதையிலேபோகவிடான்

கொடியென்றநாகமது கொத்தும்வேளை அறிவீர்களோ

அடங்காத பாம்பதுதான் அதன்நஞ்சை அறிவீர்களோ

எண்ணடங்கா பாம்பதற்கு இருக்கிறார் இரையாக

இருபத்தைந்துபாம்பாக உங்களிடம்பார்க்கவருகிறாரே

சான்றோரிடமிருந்து பலசாத்திரங்கள் சொல்லித்தாறேன்

என்னாலேஆகுமட்டுமிதுவரைக்கும் புத்திசொன்னேன்

நானாண்டி ஆண்டிநடுக்காட்டு குருவாண்டி

கேளாண்டிகுலத்தாண்டி இந்தகுவலயத்தை அளந்தாண்டி

சித்தாண்டிசிவனாண்டி இந்ததேசமெங்கும் நானாண்டி

மாலாண்மாறாண்டி நான்மாலும்சிறு ஆண்டியடா

கந்தைத்துணிதோளிலிட்டு கந்தப்பனும் நான்வருவேன்

இன்னும்சிலகாண்டம் எடுத்தெழுதி சொல்கிறேன்

ஆயிரத்தெட்டாம்மாசியிலே கலியுகத்தில்வந்தேனடா

சாதியானலிங்கமொன்று சமுத்திரத்துள்ளிருக்குதடா

ஆதியானலிங்கமதை நீங்கள்தினம் போற்றிடுங்கோ

அதில், முத்தியுண்டு சக்தியுண்டு முனிபரனும்பாடுகிறேன்

கோலநெடுமாலயனும் கோலம்கட்டி ஆடுகிறேன்

நித்தம்செத்த பாவியப்பா நாதனெடுத்து தாறேனப்பா

செத்துச்செத்துப் பிறப்பே னடா

என் சித்துவித்தை அறிய மாட்டேன்

அல்லும்பகலும் குறிகள்சொல்லி அவதிமெத்த ஆச்சுதடா

ஆடுதடா ஒருபம்பரம் தான்

அதையமர்த்த வல்லாருண்டோ

காணுங்குறிசொல்லுதற்கு கழுகுமலையாண்டிவந்தேனடா

இனிதேனமலர் மீதிருந்து பலசிறப்புச் செய்யவாறேனடா

உங்கள் குலதெய்வமென் றுஎனக்குக்கடன் செலுத்தயாருமில்லை

ஏவல்செய்யும் பிசாசாலே என்மக்காள்ஈடழிந்துபோனீர்களே

மகாலிங்கம் சொக்கலிங்கம் மாயமுத்து சோதிலிங்கம்

ஒருமுத்துலோகமுத்து இந்த உலகமெங்கும் பெருத்தமுத்து

ஏகமுத்து நாகமுத்து எங்கும்முழு முத்தானேன்

வையமெல்லார்முத்தாச்சு அதைவகையறிவாரில்லையப்பா

காடெங்கும்கனத்தமுத்து அதை கண்டெடுப்பார்யாருமில்லை

சத்துக்குள்ளமுத்தப்பா அதுவுங்கள் சகலவினைதீர்க்கும்முத்து

பக்தியுள்ளமுத்தப்பா அதுவுங்கள் பதியேறும் அந்தமுத்து

கண்டவர்எடுத்திடுங்கோ உங்கள் காரணத்தெய்மப்பா

ஆணாகிபெண்ணாகி உங்கள் அம்பலக்கூத்தாடியப்பா

கூத்தாடிச்சித்தனும்நான் கூன்கிழவன்பண்டாரம்

பண்டாரக்கிழவனடாநான் பதிவைத்து பிடித்திடுவேன்

இன்னுமென்னை அறியவில்லை சோபனமும் சொல்லவில்லை

மருந்துவாழ்மலையென்று மயங்குகிறாரென் மக்களெல்லாம்

மேலுங் கீழுந்தெரியாது

நான்மெய்யன்மகன் பொய்யனப்பா

கட்டுப்பாடுமொட்டாத நான் உன்குருவும் சொல்லுகிறேன்

கங்கையிலேதீர்த்தமாடி உங்கள்கேசவரை போற்றிடுங்கோ

காயக்காரன் மாயசித்தம் நானுங்கள்

கண்காணப் பெருவழியேன்

அவரவர்கள்செய்யுங்குற்றம் உங்களாண்டி அறிவேனடா

கடலதிலேதீர்த்தமாடி நீங்கள்கனத்தவம் செய்திடுங்கோ

உங்கள்கங்கையிலே எப்போதும்கேசவன் இருக்கின்றேன்

மயங்குகிறார் ஏழுபெண்ணும் இந்தவையகம் அறியவில்லை

நளாலுதிசைக்குள்ளாக நடுவேயென்று இருக்குதப்பா

அந்தமூலைப்பேருஞ்சொல்வான் அறிந்தோரறயிந்திடுங்கோ

தெட்சணாமூலையிலே பதிபோட்டிருக்குதடா

அதுகுட்டிபோட்டுஇருக்குதப்பா முக்கோடிதவஞ்செய்து

பார்தனிலே அக்குருவும் பதிபோட்டிருக்கின்றாரே

இரவுபகல்எப்போதும் அவர்க்குயிரைபோட்டாற்றுவதில்லை

அஞ்சாமல் பிடித்திடுங்கோ அடங்கிடுவாரக்குருவும்

நஞ்சுதின்று நாளாச்சு நான்மறையப்போறெடனா

வஞ்சகமில்லை சொன்னோம் வழிபார்த்துப்பிடித்திடுங்கோ

வையத்தில்யாபேர்க்கு மொருவலுச்சக்கரம்வருகுதப்பா

கந்தன்திருவேலனே என்ன ஆண்எயென்றறியமாட்டான்

கண்டதுண்ட மாகவல்லோ கனத்தபூமி வெடிக்குதடா

கோலநடுமாலயனும்சாலங்கட்டி ஆடுகிறேன்

காளிவெள்ளம் வருகிறதுகப்பல்செய்து வைத்திருங்கோ

நாடெல்லாம் காடாகும் நல்அக்கினிவந் தாகுதடா

நாலுகாலு ஜீவஜெந்து நாட்டிலில்லை ஓட்டமடா

கங்கைபால் வற்றுமப்பாகிழவன்பண்டாரம் சொல்லுகின்றேன்

வெட்டவெளிதனில்மக்காள்வேலி பயிராகுதப்பா

ஊரோட்டம்தேரோட்டம் மக்காளொன்றுவட்டம் ஆகுதடா

மாரிவெள்ளம் அழிக்குதடா மாயாண்டி சொல்லுகிறேன்

கூத்தாடிக்கூத்தாடி நான்கொள்ளிவைத்துப் போவேனடா

கொள்ளிவைக்கும்குமரனடா கொப்பன்நந்தி யீசனடா

பள்ளிக்கணக்கனடா நான் பள்ளியிலே ஆடிவாறேன்

கங்கைநீர் ஆடிவாறேன்கிழவன் பண்டாரக்கூத்தாண்டி

வெள்ளானை மீதிருந்து விளையாடிப்பாடுகிறேன்

துரியோதனனுக்கு நாரதமுனி வாறேன்நான்

பாட்டனும் பூட்டனும்நான் பாரசித்த பிச்சைக்காரன்

நேரில் பிரியமும்நான் பேதைக்கோலம் மாறியும்நான்

அஞ்சாடு மேய்த்தடைத்த ஆனந்தக்கோன் வந்தேனடா

கூடாரத்துக் குள்ளிருந்து குலவிசை செய்திடுவேன்

நான்பாவி பொல்லாதவன் நாட்டில்ஒருவருக்கும் ஆகாது

கோட்டிகொண்ட பித்தனடா குடிகொடுக்ககுருவும்நான்

உன்கூட்டுக்குள்ளிருந்து குறிபலதும்சொல்வேன் நான்

தேராண்டியப்பா நான் தெருவீதி ஆடிவாறேன்

கைலாசம் தனிலிருந்துபல காரணங்கள் முடிக்கவந்தேன்

ஆணானேன் பெண்ணானேன் அடங்காத சொருவமானேன்

அஞ்சாடு மேய்ந்திருந்தஉங்களுக்கு ஆடபேறாய் நானிருந்தேன்

கஞ்சிவெள்ளம் கொடுக்கவுங்கள் கனவிலும் எண்ணமில்லை

ஒடுங்கிவிட்டேன் ஆடுமேய்த்து ஒருபலனும்கண்டதில்லை

இனிகடுவாய்க்கிரையாக காட்டிக்கொடுத்திடுவேன்

கும்பி கொதிக்குதடா எனக்கினி குடியிருக்கலாகாது

போவேன் கைலாசம் பின்அடி மாதத்திலே

முன்னாடி பின்னாடி முழுதெய்யாத ஆடியானேன்

கண்டபொருள் திரவியங்கள் காணாமல் போகுதடா

அஞ்சுவீடு அழியுதடா ஆண்டிநான் என்னசெய்வேன்

பஞ்சவர்ண மேடைகளும் பள்ளிவாசல் அழியுதடா

முன்னோலைவாசகத்தை முழித்திருந்து கேட்டிடுங்கோ

பின்னாலே கண்டதுதர்ன போகுதடா என்மகனே

சத்தியமாநடந்திடுங்கோ நான்சடையாண்டி சொல்கின்றேன்

மாசியென்ற மாதத்திலே உங்கள்மாமனுக்கு போதாது

நாட்டில்குறிகள்சொல்லி நான்பிழைக்கவந்த இடந்ததினிலே

வந்த இடந்தனிலே ஒருவலுக்கடுவாய் வருகுதப்பா

கடுவாய்கண்டால்விடாது நான்காணாமல் மறையபோறேன்

ஏகமெங்கும் வெளியாச்சே நளானெங்கே ஒளித்திடுவேன்

கடலதிலே போகுமுன்னே எனைகடுவாய்ப் பிடித்துகொள்ளும்

வேதமுத்து ஞானமுத்து உங்களுக்கு வேண்டும் வேலை செய்யுமுத்து

சப்பாணிக்கிழவனுக்கு தங்கயிடமல்லையப்பா

பார்தனிலேதான் அடங்கிமக்கள் மனதிலேயே யிருந்துவிட்டேன்

பண்டாரக் கிழவனுக்கு பயந்தெளிப்பார் யாருமில்லை

எங்கெங்கே போனாலு மெனக்கிரவுபகல்ஆகுதப்பா

என்மக்காள் சீசர்களே நானிதுவரை புத்திசொல்லிவந்தும்

அறிந்தோர் அறிந்திடுங்கோ அறிவுள்ளோர் கேட்டிடுங்கோ

தெரிந்தோர் தெரிந்திடுங்கோ உங்கள்சித்தம் பலதாண்வரை

தெளியார்க்கு பதேசம் நீசெப்பிரு என்மகனே

இரப்போர்க்கு அன்னமது ஈந்திடுங்கோ கண்ணுமக்காள்

ஆடைகொடுத்திடுங்கோ அம்பலாசாரஞ் செய்திடுங்கள்

கொடுத்தால் அன்னம் குறையாமல் கொடுத்திடுங்கோ

கொடுத்தால்பதவியுண்டு குறைவில்லைஉங்களுக்கு

படித்தோர் கேட்டிடுங்கோ பலபாசைக் காரர்கள்

அடிப்பார் அடிக்கவந்தால் அடியைச் சகித்திடுங்கோ

வம்புவசைகள்சொல்லி வைதாலும் கேட்டிடுங்கோ

அவரவர்கள் தன்கணக்கு உங்கள் அரசனிடத்தி லிருக்கிறது

என்பேரைச்சொல்லி எவரெவர்வந்தாலும்

அன்பாக அன்னமிட்டு ஆதரித்த பக்தருக்கு

என்னஎன்ன அபாயம்இடுக்கமதுவந்தாலும்

அன்னேரம்நாராயணன் ஆயனங்கேநான்வருவேன்

அதிகாரபத்திரத்தில் அரவர்க்கு தீர்ப்புண்டு

சத்தியத்தீர்ப்புகேட்க மத்திபத்தைச் செய்யாதே

மத்திபத்தைச் செய்தாயானால் மனநாகந் தீண்டிவிடும்

தீர்ப்புக்கேட்கநாளாச்சு தெரிந்தோர் தெரிந்திடுங்கோ

தம்பிகணக்கனையும் தான்கூட்டி வாறேனப்பா

நெடுநாமம் அழியுதடா நேர்வழி தோணுதடா

தரணியது அழிந்தாலும் சத்தியம் அழியாதப்பா

சிவகாண்டதீர்பெழுதி தெரிவித்தேன் என்மகனே

வீட்டுக்கொரு கணக்கன் யிருக்கிறான் வையகத்தில்

உன்நாவில் நானிருந்து நடுதீர்ப்பு செய்யுகிறேன்

பலசொருபம் பாடிவைத்த பத்திரத்தை பார்த்திடுங்கோ கண்ணுமக்கா

யின்னும் ஒருகாண்டம் எழுத்தெழுதி பாடுகிறேன்

அயோத்திப ட்டணந்தான் அழியுதப்பா என்மகனே

அச்சுத்தேரி ஒடியுமுன்னே ஆண்டிவேலை செய்திடுங்கோ

பஞ்சவர்கள் அஞ்சுபேர்தான் பதியதுதான் அழியுதப்பா

குருநாடு அழியுதப்பா கோபாலகுருசாமி சொல்லுகிறேன்

மந்திரமும் நானானேன் மருந்துமூலி நானானேன்

சந்திரனும நானானேன் சூரியனும் நானானேன்

சேரசியங்கள் சூத்திரங்கள் பலசாஸ்திரங்கள் நானானேன்

எண்ணடங்கா சோதிபரன் மண்ணடங்கியிருக்கிறேன்

வேதாந்தம் சித்தாந்தம் விளம்பிவைத்தேன் வையகத்தில்

கொத்தை குறையாதே குறைமரக்கால் வையாதே

துலங்குதப்பா மேல்பதிதான் துணையாகும் உங்களுக்கு

உபதேசம் சொல்லும் கூலிஉடன் கையில்கொடுத்திடுங்கோ

பத்திரத்துக்கெழுத்து கூலிபலயிடம் வாங்கி கொடுத்திடுங்கோ

பள்ளிகண்கரெல்லாம் பதிவு குறையாமல் கொடுத்திடுங்கோ

கற்ப மூலி உங்களுக்கு கர்மவீனை தீற்குமுலி

காணுதப்பா அப்பதிக்குள் ஒருகனத்தமுத்துயிருக்குதடா

யின்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி சொல்லுகிறேன்

பாவனாசம் மானதிலே பள்ளிகொண்டார் தர்மலிங்கம்

பார்த்து உங்கள் சாஸ்திரத்தை படித்து அங்குயிருக்கிறார்

கடலதிலே தீர்த்தம் செய்து உங்கள் கர்மவீனை தீர்த்திடுங்கோ

கடலுக்குள் ஒருபாப்பான் பலகர்மங்கள் நடத்துகிறான்

வய்யகத்தில் வைகை வாசல்காவலாளி ஒன்பது பேர்

ஒன்பதுபோர் அங்கிருந்து பலஉபகாரஞ் செய்கிறார்

கயிலைமலை தன்னை கண்டு கனத்தவஞ் செய்தமக்கள்

கயிலை மலையானதிலே ஒருதவசியிருந்து வாடுகிறார்

அந்த தவத்தினுட அதிசயத்தை உங்களப்பன் சொல்லுகிறேன்

ஓடிஓடி பார்த்தாலும் ஒருவருக்கு தெரியாது

காயம்பு மேனியனார் கண்ணில் அதுகாணும்

தூங்காமல் தூங்குகிறார் அதன்சூத்திரத்தை அறிவாரில்லை

அடங்காத தவசுதான் அதின்நஞ்சயிறிவீர்களா

வயிற்றுக்கிரைதேடி வாறார்காண் அக்குருவும்

எண்ணடங்கா சொருபத்தலே அதில்என்சொருபம் அங்கு உண்டு

பிடித்த பிடிவிடாது பேயாண்டி சொல்லுகிறேன்

எங்கே எங்கே என்றுசொல்லி எட்டுதிசை பார்க்குதடா

பிழைப்பதற்கு வழிபார்த்து பிலத்தவஞ் செய்திடுங்கு

நான்மறைக்ககூடாது ஞானமுத்து சொல்லுகிறேன்

எங்கே எங்கே ஒளித்தாலும் யிரவுபகல் ஒன்றார்க்கும்

அன்பர்களே என்மக்களே அறிந்தோர் அறிந்திடுங்கோ

நஞ்சு எச்சி தின்றவர்கள் ஞானக்காளிக்கிரையாவார்

மேலும் எய்யாத சமயமதுள் இருக்குதுடா ஆளிப்புழு

வையகத்தில் பொய்களவு வாதுசூது பிறர்மோகம்

செய்யாத தீவினைகள் செய்தபேர் உண்டுமானால்

அகிலகிடங்கில்வாழும் ஆழிப்புழுக் கிரையாவீர்

முன்கணக்கும் பின்கணக்கும் முதற்கணக்கும் நான் கொடுத்து

கணக்கையெறிந்துவிட்டேன் கனகயிடம் தூத்திவிட்டேன்

வாழும்பள்ளிமேலவாசல் ஒன்றை அடைத்துவிட்டான்

பட்டந்தனைபறித்து அவர்களை பாரச்சிறை வைத்திடுவேன்

ஆடுகிடாய் கோழிபன்றி ஆயனுக்கு வேண்டாம் காண்

மேளதாளம் குரவை தொனி வேண்டாம்காண் யீசனுக்கு

ஓரு அன்புமலரெடுத்து அனுதினமும பூஜைசெவ்வாய்

நடுதீர்ப்பு நான்கேள்க்க நாளதுக்கு வருகுதப்பா

பள்ளிக்கணக்கரெல்லாம் பாடஞ்சொல்ல வேணுமடா

நாட்டு கணக்கெடுத்து நாம் தீர்ப்பு நடத்தயிலே

என்மக்கா சீசர்களே எடுத்தெழுதி சொல்வீர்களே

அம்பலத்து கணக்கர்களே நீங்கள் அறியவில்லை என்பீர்களே

காப்புக்கட்டி வைத்தமகன் கனபவுசு எண்ணுகிறான்

பண்டம் பறிபோகுதடா அவர்களை பாரச்சிறை வைத்திடுவேன்

ஆயிரத்தெட்டாம்மாசியிலே ஆண்டிபுத்திசாலிவந்தேன்

வழிதப்பி எல்லோரும் மயங்குகிறார் கேள்மகனே

ஆண்டிக்கு கோபமானால் அழிந்துவிடும் முப்புரம்போல்

அடங்காதகோபமாச்சே ஆண்டியென்ன செய்வேனடா

மக்களுக்கு வேலைசெய்ய மனமில்லைஎந்தனுக்கு

இன்னும்ஒருகாரணம் எடுத்தெழுதிசொல்லுகிறேன்

அவரவர்க்குத்தனித்தனியே ஆண்டிபுத்திசொல்லிவந்தேன்

நந்திசொன்ன உபதேசம்மக்கள் நாள்தோறும்கேட்டிருந்தும்

நீலனுக்கு மூக்கனுக்கு சொன்னநெட்டூரம்போலாச்சே

முன்னும்பின்னும் சொல்லியிருந்தும் முழுமோசம் ஆகிபோச்சு

புத்திகெட்டபிள்ளைகளே நீங்கள் சக்திகெட்டுபோனீர்களே

ஒருகாதில்தான்கேட்டு ஒருகாதில் விட்டீர்களோ

இனிநம்மா லேயாகாது நமக்குஇவ்விடஞ்செல்லாது

வல்லாண்மைசெல்லாது வலுவழக்கு ஆகுதிங்கே

பொல்லாப்புக்கட்ட வேண்டாம் போறென்கைலாசம்

நாதனுமேகேட்டதற்கு நன்மையொருவாpல்லை

நாதனுமே கேட்டதற்கு நன்மையொருவாpல்லை

கண்டகோவில்தெய்வமென்று கையெடுத்தால் பலமுண்டோ

கடுவாய்பிடித்ததுண்டால் காணாமல் மறைந்துவிடுவேன்

பாம்புகடித்ததுண்டால் பதைத்துநீங்கள்பட்டிடுவீர்

இனவாதை பிடித்ததுண்டால் இருப்பீர்களோ இவ்வுலகில்

ஞானக்கழுகுபிடித்ததுண்டால் இந்தநாட்டில் இருப்பீரோ

அண்டபகி ரண்டம்வெல்ல ஆயுதம் பிடித்ததுண்டால்

துண்டுதுண்டாய்போய்விடுவீர் துணையுண்டோ உங்களுக்கு

குலத்தைக்கெடுக்கின்ற கோடாரிக்கம்பதுபோல்

உங்களுடையபாவம் உங்களுக்கு கொல்லும்வேலா யிருக்குதடா

கோபமது உங்களுக்கு கொல்லும்வேலா யிருக்குதடா

கொலைகளவு உங்களுக்கு கொல்லும் ஆயுதமாயிருக்குதடா

வாதுசூது பிறர்மோகம் வளருதப்பா ஒருகழுகாய்

ஆசையது உங்களுக்கு என்மக்கா தோசமாயிருக்குதடா

எல்லோர்க்குங்கோபமாச்சுஇடையிலோட்டம் ஆச்சுதடா

பிரமன் பகைத்துண்டால் நீங்கள்பேசாமல் போய்வீடுவீர்

விஷ்ணு பகைத்ததுண்டால் வெறியாட்டம் கொண்டிடுவீர்

உத்திரம் பகைத்ததுண்டால் உயிர்பிழைக்கமாட்டீரப்பா

காலனும் வந்துவிட்டால் உங்களைக்

கைபிடியாய் கொண்டுபோவான்

இத்தனைபேர் சோ;ந்திருக்க ஈசென்ன செய்வேனப்பா

அவரவர்க்கு இட்டகுறை ஆதிமுனி என்னசெய்வேன்

நடுத்தீர்ப்புக் கேட்குதற்கு நாளடுத்து வருகுதப்பா

நடுத்தீர்ப்புக்கேட்டவுடன் நாடாள நான்வருவேன்

சீசன்மார்தன்னிடத்தில் மக்கள்தெளிவாக கேட்டிடுங்கோ

சொல்லுங்கப்பா அன்பருக்குத் துணையா யிருந்திடுங்கோ

உன்னோடு என்னாளும் உயிர்க்குயிரா யிருப்பேனப்பா

ஊட்டுகிறேன் ஓட்டுகிறேன் நான்உயிர்க்குயிரா யிருக்கிறேன்

வம்புவசைபேசாதே என்வாளுக்கிரையாகதே

ஏசாதேபேசாதே யென்கணக்கர்சீசர்களே

சிரிப்பாரோடேயிருப்பேன் நகைப்பேன்நாக்கறுப்பேன்

முன்னாலேஒடுக்கிவந்த ஒருவரையும் விட்டதில்லை

எதிர்த்தவனை வைத்தேனோ உங்கள்யிருகாதுங்கேட்கலையோ

கள்ளனிடம் நானிருப்பேன் பின்காட்டிக் கொடுத்திடுவேன்

பிடித்தவனோடே யிருப்பேன் அவரைபிள்ளை போலாக்கிடுவேன்

குடியிருந்துகொலைகள் செய்வேன்பின்
கொலைக்கழுவில் போட்டிடுவேன்

கண்டதுண்டமாய் அழியுதப்பா கைலாசம் புரண்டுபோச்சே

பரமனென்னைக்கண்டதுண்டு தனித்து நானிங்கு வந்தேன்

பரிசித்துராஜன் கண்டதுண்டு பயந்திடுங்கே ஓடிவந்தேன்

மார்க்கண்டேன் வந்ததுண்டு மறைந்திங்கே வந்ததுண்டு

வையகத்தில் எமனும் மாயனும் கண்டதுண்டு

ஈசனுடனேவார்த்தை சொல்லாதே நீபடுகுழியில் விழாதே

ஆண்டிபேர் சொன்னதுண்டால் ஆசாரஞ் செய்திடுங்கோ

கொட்டிமுழக்கிடுவேன் குடிகரை யேறுமட்டும்

பொய்க்காற்று அடிக்குதப்பா பெருவெள்ளமதாய்க் போகுதடா

கொம்புசத்தம்கேட்குதப்பா வம்புகலி யழியுதடா

இன்னும்செப்படி வித்தையொன்று செய்கின்றேன் கேள்மகனே

வையகத்தில் ஒருசாரிரம்
வகைவகையாய் நாடாள்வார் தேசமெங்கும்

நம்முடைய சித்துவித்தை காணக்கான மூன்றானேன்

மாயவன்பொல்லாதான் குடிகொண்டால் உள்ளறிவான்

மாசியென்றும் வாசியென்றும் மாமுனிப்பற்று சொல்லுகின்றேன்

ஒன்றுக்கொன்று பகையாச்சே உங்களுண்மை பகையானால்

விள்ளுரென்றும் ஒருவனுண்டு பலவேடிக்கைக் காறனடா

நாட்டுமுடியிறக்கி வைகுண்டராசர் ஆளவருகிறார்

நம்பிப் பிடித்திடுங்கோ அய்யா சிவசிவா அரகரா
.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம் முற்றிற்று !
.
அய்யா உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here