ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே
காற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலே
தரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யா
அன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யா
என்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா
உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்
எங்களுக்காக நீயும் அமைத்து தந்தாய் குடில்
சரணம் சரணம் அய்யா உன் நாமம்
வரணும் வரணும் நித்தம் என் நாவில்
சரணம் சரணம் அய்யா உன் நாமம்
வரணும் வரணும் நித்தம் என் நாவில்
ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே
காற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலே
ஆண்டியை தொட்டுவிட்டால் அரசாட்சி போகுமய்யா
நாடியே வருவோர்க்கெல்லாம் நல்லாட்சி கிடைக்குமய்யா
காலமெல்லாம் உன் காலடிக்கு பணிவிடை செய்திட
நீலமேக வண்ணா எனை பிறவி செய்திடு
சரணம் சரணம் அய்யா உன் நாமம்
வரணும் வரணும் நித்தம் என் நாவில்
ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே
காற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலே
ஓலை குடிசையிலும் உன் அருளுக்கு குறையில்லை
ஏழை குடிசையிலும் குடியேற நீ மறந்ததில்லை
வைகுண்ட வாசனை ஊற்றுமுகத்திலும் வீசுதய்யா
பூலோக வைகுண்டம் உளற்றுமுகம் தானய்யா
சரணம் சரணம் அய்யா உன் நாமம்
வரணும் வரணும் நித்தம் என் நாவில்
ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே
காற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலே
தரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யா
அன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யா
என்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா
உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்
எங்களுக்காக நீயும் அமைத்து தந்தாய் குடில்
சரணம் சரணம் அய்யா உன் நாமம்
வரணும் வரணும் நித்தம் என் நாவில்
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd