முகமெல்லாம் மஞ்சளம்மா
காலிரண்டும் தங்கமம்மா
பல்லெல்லாம் முத்தம்மா
கண்ணிரண்டும் பவளமம்மா
முகமெல்லாம் மஞ்சளம்மா
காலிரண்டும் தங்கமம்மா
பல்லெல்லாம் முத்தம்மா
கண்ணிரண்டும் பவளமம்மா
வாங்கம்மா வாங்க பாலவிளை வாங்க
இசக்கி அவள பாருங்க இன்பம் வரும் கேளுங்க
பேரழகி இசக்கி பெருமை எல்லாம் தருவா
பேரழகி இசக்கி குழந்தை வரம் தருவா
காதிரண்டும் மரகதம்
கையிரண்டும் கற்பகம்
கூந்தலெல்லாம் கார்மேகம்
கழுத்தெல்லாம் வைரம்
காதிரண்டும் மரகதம்
கையிரண்டும் கற்பகம்
கூந்தலெல்லாம் கார்மேகம்
கழுத்தெல்லாம் வைரம்
இடையெல்லாம் அலங்காரம்
வாங்கம்மா வாங்க பாலவிளை வாங்க
இசக்கி அவள பாருங்க இன்பம் வரும் கேளுங்க
பேரழகி இசக்கி பெருமை எல்லாம் தருவா
பேரழகி இசக்கி குழந்தை வரம் தருவா
வளையலெல்லாம் கலகலக்குது
கம்மலெல்லாம் கிணுகிணுக்குது
கொலுசெல்லாம் சலசலக்குது
நெற்றி சுட்டி எட்டி பாக்குது
வளையலெல்லாம் கலகலக்குது
கம்மலெல்லாம் கிணுகிணுக்குது
கொலுசெல்லாம் சலசலக்குது
நெற்றி சுட்டி எட்டி பாக்குது
வாங்கம்மா வாங்க பாலவிளை வாங்க
இசக்கி அவள பாருங்க இன்பம் வரும் கேளுங்க
பேரழகி இசக்கி பெருமை எல்லாம் தருவா
பேரழகி இசக்கி குழந்தை வரம் தருவா
வாங்கம்மா வாங்க பாலவிளை வாங்க
இசக்கி அவள பாருங்க இன்பம் வரும் கேளுங்க
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd