ஓம் என்னும் நாதனே ஓங்கார ரூபனே ஓயாது உன் நாமமே ஓதுவோரின் காவலனே
சித்தி கணபதி சிரித்துக் கொண்டு நல்ல புத்தி தருகின்றான்
சிவசக்தி தந்த மகனாம் ஆலும் அரசும் புடைசூழ இருக்கின்றான்
பாவமெல்லாம் போக்கிடவே பானை வயிற்றை உடையவனே
பாசம் அங்குசத்தோடு மோதகத்தை கையில் வைத்திருப்பவனே
நூறாண்டு கண்ட அதங்கோடு கண்ணனை வணங்கிட
நூறு ஜென்ம போதாதம்மா
தலை முறை தலைமுறையாக தலை வணங்கி நின்றிட
தலைமுறைக்கே வரம் தந்திடு கண்ணா
மயிலும் அங்கே ஆடுது கண்ணா
குயிலும் உன் புகழ் பாடுது கண்ணா
ஐயப்ப கோஷம் அகிலத்தை ஆள
ஹரிஹரசுதன் இங்கே ஐயம் போக்குகின்றான்
சரண கோஷத்திற்கு வந்த இடையூறை மாற்ற
ஐயப்பன் இங்கே குடி கொண்டான்
மோகன கண்ணன் மோகினி வடிவிலே மகிஷியை அழிப்பதற்கு தந்த மகனே
நெய்யோடு தேங்காயை கொண்டு வரும் போது மணம் நெய்யாக உருகுதய்யா
பம்பையிலே குளிக்கையிலே பகவானை நினைக்கையிலே
பக்தியிலே சரண கோஷம் நாவிலே ஒலிக்குது
நூறாண்டு கண்ட அதங்கோடு கண்ணனை வணங்கிட
நூறு ஜென்ம போதாதம்மா
தலை முறை தலைமுறையாக தலை வணங்கி நின்றிட
தலைமுறைக்கே வரம் தந்திடு கண்ணா
மயிலும் அங்கே ஆடுது கண்ணா
குயிலும் உன் புகழ் பாடுது கண்ணா
மயிலாடும் வேலவனே திருமுருகனே
மயிலாடும் பாறையிலே ஆடி தளர்ந்தவனே
வேலெடுத்து விளையாடும் முருகா முருகா
வேதனைகள் தீர்த்திட ஓடிவாய்யா
வண்ண மயிலேறி வள்ளியோடு துள்ளி வேலெடுத்து வருவது அழகய்யா
பிரம்மனுக்கு பாடம் சொன்ன சுப்பையா எந்தனுக்கு அருளிட வா முருகைய்யா
நூறாண்டு கண்ட அதங்கோடு கண்ணனை வணங்கிட
நூறு ஜென்ம போதாதம்மா
தலை முறை தலைமுறையாக தலை வணங்கி நின்றிட
தலைமுறைக்கே வரம் தந்திடு கண்ணா
மயிலும் அங்கே ஆடுது கண்ணா
குயிலும் உன் புகழ் பாடுது கண்ணா
நாக தோஷங்கள் போக்கிடும் நாகராஜாவே
குடும்பத்தோடு வாசம் செய்யும் மாயம் என்ன
ஆயில்ய பூஜையில் அழகாக அலங்கரித்து
பாலோடு மஞ்சளில் குளித்து மகிழ்கின்றாய்
படையை நடுநடுங்க செய்து பக்தர்களை காத்திடும் படமெடுத்து ஆடும் நாகராஜா
மாய கண்ணனுக்கு குடை பிடித்து பள்ளி கொள்ள இடம் பிடித்தாயே
மாலையாக மணிமாலையாக நீலகண்டன் கழுத்திலே
இடை அலங்காரனாக கணிபதியின் வயிற்றிலே
நூறாண்டு கண்ட அதங்கோடு கண்ணனை வணங்கிட
நூறு ஜென்ம போதாதம்மா
தலை முறை தலைமுறையாக தலை வணங்கி நின்றிட
தலைமுறைக்கே வரம் தந்திடு கண்ணா
மயிலும் அங்கே ஆடுது கண்ணா
குயிலும் உன் புகழ் பாடுது கண்ணா
விண்வெளியை வட்டமிடும் நவகிரகமோ
கண்ணெதிரே காட்சி தரும் அழகை பாருங்கள்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டின் தரிசனத்தை இங்கே கண்டிடலாமே
சுட்டெரிக்கும் சூரியனும் சுடாமல் இங்கே சூரியகாந்தி பூ போலே சிரிக்கின்றான்
சங்கடங்கள் தந்திடும் சனீஸ்வரனும் சல்லியத்தை நீக்கி காக்கின்றான்
கல்வி தந்திடும் குருவோ அனைவருக்கும் குருவாகி ஞானத்தை தருகிறான்
அத்தனை பேரும் இங்கே அமர்ந்து கொண்டு அவரவர் பணி செய்வது நமது புண்ணியம்
நூறாண்டு கண்ட அதங்கோடு கண்ணனை வணங்கிட
நூறு ஜென்ம போதாதம்மா
தலை முறை தலைமுறையாக தலை வணங்கி நின்றிட
தலைமுறைக்கே வரம் தந்திடு கண்ணா
மயிலும் அங்கே ஆடுது கண்ணா
குயிலும் உன் புகழ் பாடுது கண்ணா
சண்டி தனம் செய்பவரை சாமுண்டேஸ்வரி பாத்திடுவா
பக்தியால் பாடுபவரை புவனேஸ்வரி காத்திடுவா
தாலி வரம் தந்திடுவா மஞ்சள் குங்குமம் காத்திடுவா
தஞ்சம் அடைந்தோருக்கு காவலாக துணை இருப்பா
வேப்பிலை சேலைக்காரி வேதனையை தீர்த்து வைக்க வேகமாக ஓடி வருவா
முககாப்பிலே முழுமனதையும் பறிகொடுத்து புன்னகையில் நமை மயக்கிடுவா
அம்மா நீ புவி வாழும் ஜீவர்க்கெல்லாம் தாயம்மா
அன்னையர்களுக்கெல்லாம் நீயே என்றும் சேயம்மா
சிங்கத்தின் மீதேறி திரிசூலம் ஏந்தி சிங்காரி மாரி சிவனின் பாதி
சிவகாமி நாச்சி அதங்கோட்டில் ஆட்சி
பவுர்ணமி நிலவாக பசும்பாலின் குணமாக பட்டாடை உடுத்தி பவனி வருவது கண்கொள்ளா காட்சி
நூறாண்டு கண்ட அதங்கோடு கண்ணனை வணங்கிட
நூறு ஜென்ம போதாதம்மா
தலை முறை தலைமுறையாக தலை வணங்கி நின்றிட
தலைமுறைக்கே வரம் தந்திடு கண்ணா
மயிலும் அங்கே ஆடுது கண்ணா
குயிலும் உன் புகழ் பாடுது கண்ணா
நூறாண்டு கண்ட அதங்கோடு கண்ணனை வணங்கிட
நூறு ஜென்ம போதாதம்மா
தலை முறை தலைமுறையாக தலை வணங்கி நின்றிட
தலைமுறைக்கே வரம் தந்திடு கண்ணா
மயிலும் அங்கே ஆடுது கண்ணா
குயிலும் உன் புகழ் பாடுது கண்ணா
மயிலும் அங்கே ஆடுது கண்ணா
குயிலும் உன் புகழ் பாடுது கண்ணா
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd