நித்தம் நித்தம் பாடுவேனே நித்ய கல்யாணி
புத்தம் புதிய மெட்டெடுத்து பாடுவேனே
வந்திடம்மா வந்திடு அருள் தந்திடம்மா தந்திடு
சூலம் தனை ஏந்திடு சூரனை வதைத்திடு
கறுகறுத்த கூந்தலோடு கார்மேக கலரோடு
கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பா சிரிப்பாளே
வந்தது வந்தது ஆடி கொண்டாடிடுவோம் கூடி
வந்தனம் வந்தனம் பாடி பெறுவோம் புண்ணியம் கோடி

ஊஞ்சல் ஆடும் அழகை கண்டால்
கண்ட கண்ணை மகிழ்விக்க வீட்டில் தொட்டில் ஆடுது
செக்கசிவந்த வானத்தைப் போல செந்தூர காவல்காரி
செங்கோல் ஏந்தி செய்கிறாளே அரசாட்சி
பளபளக்கும் மூக்குத்தியோடு பட்டு வண்ண சேலைக்காரி
பக்குவமா கரையேற்றிடுவா வழிகாட்டி
வந்தது வந்தது ஆடி கொண்டாடிடுவோம் கூடி
வந்தனம் வந்தனம் பாடி பெறுவோம் புண்ணியம் கோடி
நித்தம் நித்தம் பாடுவேனே நித்ய கல்யாணி
புத்தம் புதிய மெட்டெடுத்து பாடுவேனே
வந்திடம்மா வந்திடு அருள் தந்திடம்மா தந்திடு
சூலம் தனை ஏந்திடு சூரனை வதைத்திடு
நெஞ்சமெல்லாம் நீயே குடிகொண்டாய்
நெஞ்சிருக்கும் வரை அதில் தஞ்சமடைந்திடு
பூமாரி பொழியட்டுமா பூலோகம் வரசொல்லி
தேன்மாரி சொரியட்டுமா தேவலோகம் தர சொல்லி
உமையவளே உகந்தவளே எமையாள்பவளே
உலகாள்பவளே உத்தமியே ஸ்ரீதேவி காளிகாம்பா
அசைந்து வரும் அழகிலே அகிலமெல்லாம் மயங்குது
இசைந்து நீயும் என் பாடல் கேட்க மனம் ஏங்குது
வந்தது வந்தது ஆடி கொண்டாடிடுவோம் கூடி
வந்தனம் வந்தனம் பாடி பெறுவோம் புண்ணியம் கோடி
நித்தம் நித்தம் பாடுவேனே நித்ய கல்யாணி
புத்தம் புதிய மெட்டெடுத்து பாடுவேனே
வந்திடம்மா வந்திடு அருள் தந்திடம்மா தந்திடு
சூலம் தனை ஏந்திடு சூரனை வதைத்திடு
கறுகறுத்த கூந்தலோடு கார்மேக கலரோடு
கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பா சிரிப்பாளே
வந்தது வந்தது ஆடி கொண்டாடிடுவோம் கூடி
வந்தனம் வந்தனம் பாடி பெறுவோம் புண்ணியம் கோடி
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd