Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்கு சித்திரை மாதம் அத்தம் திருவிழா… பாடல்

கஜமுகா கணேசா முதற் தலைவா கணபதிகரமெல்லாம் சிவக்குதப்பா கஜமுகா கஜமுகாகரங்கள் கூப்பி வணங்கையிலே கஜமுகா கஜமுகாதோப்புகரண சாமி என்று குழந்தைகளும் சொல்லுதேகுளத்து புழை பாலகனின் சோதரனே கணேசா கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்குசித்திரை மாதம்...
HomeSongsகடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்கு சித்திரை மாதம் அத்தம் திருவிழா... பாடல்

கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்கு சித்திரை மாதம் அத்தம் திருவிழா… பாடல்

கஜமுகா கணேசா முதற் தலைவா கணபதி
கரமெல்லாம் சிவக்குதப்பா கஜமுகா கஜமுகா
கரங்கள் கூப்பி வணங்கையிலே கஜமுகா கஜமுகா
தோப்புகரண சாமி என்று குழந்தைகளும் சொல்லுதே
குளத்து புழை பாலகனின் சோதரனே கணேசா

கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்கு
சித்திரை மாதம் அத்தம் திருவிழா
ஆடி மாதம் மொத்தம் திருவிழா
நித்திரையை விரும்பாது நித்தம் திருவிழா

வர வேண்டும் வர வேண்டும் பந்தங்களே
வந்து அருள் பெற வேண்டும் பெற வேண்டும் சொந்தங்களே

செக்க செவேலென இருப்பாள் செண்பகவல்லி
நீலமேனி காரியவ நீலகேசி
அன்பான அக்கா தங்கை ஓரிடத்திலே
அழகு குழந்தையாக மாறிடுவா குடும்பத்திலே

கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்கு
சித்திரை மாதம் அத்தம் திருவிழா
ஆடி மாதம் மொத்தம் திருவிழா
நித்திரையை விரும்பாது நித்தம் திருவிழா

வர வேண்டும் வர வேண்டும் பந்தங்களே
வந்து அருள் பெற வேண்டும் பெற வேண்டும் சொந்தங்களே

பூங்காவனத்து வாசக்காரன் பூதத்தானும் இங்கே
ஏங்காதே என்று சொல்லி வந்திடுவான் இங்கே
பூலோகம் ஆளும் பூதத்தானோ
எமலோகம் போகாமல் காத்திடுவாங்க

கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்கு
சித்திரை மாதம் அத்தம் திருவிழா
ஆடி மாதம் மொத்தம் திருவிழா
நித்திரையை விரும்பாது நித்தம் திருவிழா

வர வேண்டும் வர வேண்டும் பந்தங்களே
வந்து அருள் பெற வேண்டும் பெற வேண்டும் சொந்தங்களே

மாறும் உலகில் மாறாத மாடன் சாமி
மானிடர்க்கெல்லாம் நீயே துணை சாமி
கருமை நிற ஆடைக்காரா காவல் காக்கும் எல்லைக்காரா
மறுமையிலும் காத்திடும் முறுக்கு மீசைக்காரன்

கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்கு
சித்திரை மாதம் அத்தம் திருவிழா
ஆடி மாதம் மொத்தம் திருவிழா
நித்திரையை விரும்பாது நித்தம் திருவிழா

வர வேண்டும் வர வேண்டும் பந்தங்களே
வந்து அருள் பெற வேண்டும் பெற வேண்டும் சொந்தங்களே

பகைவனை வெல்வதற்கும் படிப்பு வேணுமே
பகவானே படிப்பு மூர்த்தி அருள் தரணுமே
பஞ்சம் பிணியெல்லாம் நீ போக்க வேணுமே
தஞ்சம் அடைகிறேன் நீ காக்க வேணுமே

கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்கு
சித்திரை மாதம் அத்தம் திருவிழா
ஆடி மாதம் மொத்தம் திருவிழா
நித்திரையை விரும்பாது நித்தம் திருவிழா

வர வேண்டும் வர வேண்டும் பந்தங்களே
வந்து அருள் பெற வேண்டும் பெற வேண்டும் சொந்தங்களே

நாடெங்கும் வாழும் நாக தெய்வமே
நாங்கள் ஒன்றாக வாழ நல்ல வழி காட்டணுமே
குடும்பமாக நீ வாழ்வதை போல் நாங்கள் வாழ
குலம் செழிக்க உன் ஆசி வேணுமே

கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்கு
சித்திரை மாதம் அத்தம் திருவிழா
ஆடி மாதம் மொத்தம் திருவிழா
நித்திரையை விரும்பாது நித்தம் திருவிழா

வர வேண்டும் வர வேண்டும் பந்தங்களே
வந்து அருள் பெற வேண்டும் பெற வேண்டும் சொந்தங்களே

வர வேண்டும் வர வேண்டும் பந்தங்களே
வந்து அருள் பெற வேண்டும் பெற வேண்டும் சொந்தங்களே

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here