வைகுண்டா வைகுண்டா ஊற்றுமுகம் வைகுண்டா
வைபோகம் வைபோகம் வைகுண்டனுக்கு வைபோகம்
வைகுண்டா வைகுண்டா ஊற்றுமுகம் வைகுண்டா
வைபோகம் வைபோகம் வைகுண்டனுக்கு வைபோகம்
தாமரை நாயகியின் நாயகன் இங்கே
தாமரை பூவில் சிரிக்கிறான்
தலைமுறைகள் தலைவணங்க வைகுண்ட
சாமி இங்கே அருள் புரிகிறான்
வைகுண்டற்கு பதறுதல் அல்லாமல்
பொய்கொண்ட மற்றவர்க்கு அஞ்ச வேண்டாம்
வைகுண்டா வைகுண்டா ஊற்றுமுகம் வைகுண்டா
வைபோகம் வைபோகம் வைகுண்டனுக்கு வைபோகம்
பூலோக வைகுண்டம் ஊற்றுமுகமே
தேவலோக தேவர்களும் இங்கு தஞ்சமே
உச்சபடிப்பு உலகாள வைத்திடும்
பக்தி படிப்பு உனையாள வைத்திடும்
ஒரு குடையில் ஆட்சி நீதானே சாட்சி
பல குடைகள் வேணாம் நீ புரிவாய் அரசாட்சி
வைகுண்டா வைகுண்டா ஊற்றுமுகம் வைகுண்டா
வைபோகம் வைபோகம் வைகுண்டனுக்கு வைபோகம்
புன்னகை பூத்திடும் புதுரோசா
ஊற்றுமுகம் வாழும் மகராசா
மும்மூர்த்தியும் ஒரு மூர்த்தியாக
எம்மூர்த்தியாக ஊற்றுமுகத்தில்
தானாக முளைத்தது மாமரம்
அதில் நீசெய்தாயே தவம்
வைகுண்டா வைகுண்டா ஊற்றுமுகம் வைகுண்டா
வைபோகம் வைபோகம் வைகுண்டனுக்கு வைபோகம்
வைகுண்டா வைகுண்டா ஊற்றுமுகம் வைகுண்டா
வைபோகம் வைபோகம் வைகுண்டனுக்கு வைபோகம்
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd