Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கரும்பை கையில் ஏந்தி கமலத்தில் அமர்ந்தாயே பாலவிளையிலே…. பாடல்

கரும்பை கையில் ஏந்தி கமலத்தில் அமர்ந்து கொண்டுகாஞ்சி காமாட்சி பாலவிளையிலேகறுப்பு மேனிக்குள்ளே கனிந்த இதயத்தோடுகாசி விசாலாட்சி பாலவிளையிலே கரும்பை கையில் ஏந்தி கமலத்தில் அமர்ந்து கொண்டுகாஞ்சி காமாட்சி பாலவிளையிலேகறுப்பு மேனிக்குள்ளே கனிந்த இதயத்தோடுகாசி விசாலாட்சி...
HomeSongsஎந்தன் உடலுக்குள் ஓர் இதயமுண்டு பாலவிளை பத்ரேஸ்வரி... பாடல்

எந்தன் உடலுக்குள் ஓர் இதயமுண்டு பாலவிளை பத்ரேஸ்வரி… பாடல்

எந்தன் உடலுக்குள் ஓர் இதயமுண்டு
அதில் உனக்கோர் தனி இடமுண்டு
உந்தன் கோயிலுக்குள் பலபல ஜோதியுண்டு
அதில் எனக்கோர் ஜோதியில் இடமுண்டா
பாலவிளை பத்ரேஸ்வரி

எந்தன் உடலுக்குள் ஓர் இதயமுண்டு
அதில் உனக்கோர் தனி இடமுண்டு
உந்தன் கோயிலுக்குள் பலபல ஜோதியுண்டு
அதில் எனக்கோர் ஜோதியில் இடமுண்டா
பாலவிளை பத்ரேஸ்வரி

சரித்திரம் நூறு படைக்கவே உன் சன்னதி தேடி வந்தேன்
சரித்திரமே இங்கு இருப்பதைக் கண்டு வியந்து நின்றேன்

காவியம் எல்லாம் காலனை வென்ற காளியே உனக்கு
ஓவியம் தீட்டிய விரல்களுக்கும் இருக்கு புனித கணக்கு
காவியம் எல்லாம் காலனை வென்ற காளியே உனக்கு
ஓவியம் தீட்டிய விரல்களுக்கும் இருக்கு புனித கணக்கு

எந்தன் உடலுக்குள் ஓர் இதயமுண்டு
அதில் உனக்கோர் தனி இடமுண்டு
உந்தன் கோயிலுக்குள் பலபல ஜோதியுண்டு
அதில் எனக்கோர் ஜோதியில் இடமுண்டா
பாலவிளை பத்ரேஸ்வரி

பச்சரிசி இடித்து பக்குவமாய் பிடித்து
ஏற்றினேன் மாவிளக்கு தீபம்
அட்சதையை போட்டு நீயும்
என்னை வாழ்த்தி தீர்க்கணும் என்னோட தாகம்

குடம்குடமாய் அபிஷேகம் பாலவிளை அம்மா
குறைகளை யெல்லாம் தீர்க்கணும் பாலவிளை அம்மா
குடம்குடமாய் அபிஷேகம் பாலவிளை அம்மா
குறைகளை யெல்லாம் தீர்க்கணும் பாலவிளை அம்மா

எந்தன் உடலுக்குள் ஓர் இதயமுண்டு
அதில் உனக்கோர் தனி இடமுண்டு
உந்தன் கோயிலுக்குள் பலபல ஜோதியுண்டு
அதில் எனக்கோர் ஜோதியில் இடமுண்டா
பாலவிளை பத்ரேஸ்வரி

சர்க்கரை பொங்கல் வைத்து சன்னதியை சுற்றி வந்து
கேட்பது உன்னோட தரிசனம்
ஜவ்வாது பூசிக்கிட்டு சஞ்சலங்கள் நீக்கிக்கிட்டு
தரவேணும் நீயும் தரிசனம்

கண் இரண்டு இணையும் போதும் உந்தன் தரிசனம்
உதடு இரண்டு பிரியும் போது உந்தன் நாமம்
கண் இரண்டு இணையும் போதும் உந்தன் தரிசனம்
உதடு இரண்டு பிரியும் போது உந்தன் நாமம்

எந்தன் உடலுக்குள் ஓர் இதயமுண்டு
அதில் உனக்கோர் தனி இடமுண்டு
உந்தன் கோயிலுக்குள் பலபல ஜோதியுண்டு
அதில் எனக்கோர் ஜோதியில் இடமுண்டா
பாலவிளை பத்ரேஸ்வரி

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here