கண்ணுக்குள் விளையாடும் மாய கண்ணா
மனதுக்குள் குடியேற வா வா கண்ணா
வெண்ணெய் ஒரு கிண்ணம் தருகின்றேன்
கன்னத்தை கிள்ளி பார்க்க வரம் தருவாயா
கண்ணா…. கண்ணா…..
நான் அழைப்பது கேட்குதா
உன் மறுமொழி கேட்டிட என் செவிகள் ஏங்குது
அதங்கோடு மாய கண்ணா
அனைவரையும் காக்கும் கண்ணா
ஆனந்தநகர் மாயகண்ணா
ஆனந்தத்தை தந்திடும் கண்ணா
அதங்கோடு மாய கண்ணா
அனைவரையும் காக்கும் கண்ணா
ஆனந்தநகர் மாயகண்ணா
ஆனந்தத்தை தந்திடும் கண்ணா
கண்ணுக்குள் விளையாடும் மாய கண்ணா
மனதுக்குள் குடியேற வா வா கண்ணா
வெண்ணெய் ஒரு கிண்ணம் தருகின்றேன்
கன்னத்தை கிள்ளி பார்க்க வரம் தருவாயா
பிருந்தாவனத்தில் பூத்திடும் பூவெல்லாம் கண்ணா
உன் காலடி தேடி வந்திடுதே அதங்கோடு கண்ணா
வேணுகான இசையிலே புவியெல்லாம் கண்ணா
வேகமாக சுழலுதே உன்னை காண கண்ணா
ஆவணி மாதத்தில் ஆராரோ பாட தேவகிக்கு கிடைக்கல வாய்ப்பு ஆண்டாண்டு முழுதும் ஆராரோ பாடுவதால் மனம் அடைகிறது பூரிப்பு
மூன்றடி அளந்தவா மூவுலகமும் காப்பவா
மூச்சுகாற்று தந்தவா மூர்க்கனை அழித்தவா
மூன்றடி அளந்தவா மூவுலகமும் காப்பவா
மூச்சுகாற்று தந்தவா மூர்க்கனை அழித்தவா
அதங்கோடு மாய கண்ணா
அனைவரையும் காக்கும் கண்ணா
ஆனந்தநகர் மாயகண்ணா
ஆனந்தத்தை தந்திடும் கண்ணா
கண்ணுக்குள் விளையாடும் மாய கண்ணா
மனதுக்குள் குடியேற வா வா கண்ணா
வெண்ணெய் ஒரு கிண்ணம் தருகின்றேன்
கன்னத்தை கிள்ளி பார்க்க வரம் தருவாயா
தடையெல்லாம் தகர்க்கும் தரணியெல்லாம் காக்கும்
இடை அழகனே அதங்கோடு கண்ணா
நித்தம் நித்தம் உனை நான் சுத்தி வர
நிலையான வழி தந்திடு கண்ணா
நஞ்சையுடைய காளிங்கனின் தலையில் நர்த்தனம்
பிஞ்சு நெஞ்சையுடைய ஏழையிடமும் ஆடுவாயா நர்த்தனம்
கண்ணா என்றால் கண்கள் குளமாகுதே
கண்ணா உன்னை கண்டால் நூறும் இளமாகுதே
கண்ணா என்றால் கண்கள் குளமாகுதே
கண்ணா உன்னை கண்டால் நூறும் இளமாகுதே
அதங்கோடு மாய கண்ணா
அனைவரையும் காக்கும் கண்ணா
ஆனந்தநகர் மாயகண்ணா
ஆனந்தத்தை தந்திடும் கண்ணா
கண்ணுக்குள் விளையாடும் மாய கண்ணா
மனதுக்குள் குடியேற வா வா கண்ணா
வெண்ணெய் ஒரு கிண்ணம் தருகின்றேன்
கன்னத்தை கிள்ளி பார்க்க வரம் தருவாயா
மீன பரணி பொங்காலை தினம் பாடிடுவேன் உன் புகழ்மாலை
நாராயண நாமம் நாவில் ஒலிக்க நாரதர் செய்த புண்ணியம் என்ன
என் நாவில் உன் நாமம் எந்நேரமும் ஒலிக்க
எனக்கருள் புரிந்திடு அதங்கோடு கண்ணா
பச்சைமலை மேனியனே திருமலை வாசனே இச்சையெல்லாம் தீர்ப்பவனே
கொச்சைமொழி பேசினாலும் கோபமின்றி கொஞ்சி விளையாடுபவனே
அதங்கோட்டில் குருவாயூர் கண்ணன் இருக்கிறான்
திருவுருவை கண்டு மகிழ ஒடி வாருங்கள்
அதங்கோட்டில் குருவாயூர் கண்ணன் இருக்கிறான்
திருவுருவை கண்டு மகிழ ஒடி வாருங்கள்
அதங்கோடு மாய கண்ணா
அனைவரையும் காக்கும் கண்ணா
ஆனந்தநகர் மாயகண்ணா
ஆனந்தத்தை தந்திடும் கண்ணா
கண்ணுக்குள் விளையாடும் மாய கண்ணா
மனதுக்குள் குடியேற வா வா கண்ணா
வெண்ணெய் ஒரு கிண்ணம் தருகின்றேன்
கன்னத்தை கிள்ளி பார்க்க வரம் தருவாயா
கண்ணா…. கண்ணா…..
நான் அழைப்பது கேட்குதா
உன் மறுமொழி கேட்டிட என் செவிகள் ஏங்குது
அதங்கோடு மாய கண்ணா
அனைவரையும் காக்கும் கண்ணா
ஆனந்தநகர் மாயகண்ணா
ஆனந்தத்தை தந்திடும் கண்ணா
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd