Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

துள்ளி விளையாடும் எம்பிரானை காண கிள்ளியூர் வாருங்களேன்… பாடல்

சித்தி கணபதியும் சிங்கார வேலனும் கணநேரமும் உன்னோடுஒரு கணமாவது இருந்திடு என்னோடுநாக தோஷங்கள் போக்கிடும் நாகராஜாவேகுடும்பத்தோடு வாசம் செய்யும் மாயம் என்னஐயப்ப கோஷம் அகிலத்தை ஆளஹரிஹரசுதன் இங்கே ஐயம் போக்குகிறான் சித்தி கணபதியும் சிங்கார...
HomeSongsசிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா... பாடல்

சிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா… பாடல்

பஞ்சபூத நாயகனே பரம்பொருளே
நெஞ்சம் எங்கும் நிறைந்தவா
கயிலைமலை வாசகனே
பிராட்டீஸ்வரா கிள்ளியூரின் நாயகனே

லிங்கா லிங்கா லிங்கேஸ்வர பிராட்டீஸ்வரா
சிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா

லிங்கா லிங்கா லிங்கேஸ்வர பிராட்டீஸ்வரா
சிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா

காலை மாலை பொழுதில் காலகண்டா
உனை காண கால்களும் விரும்பிடுதே
வண்ண வண்ண மணியின்றி ருத்திராட்ச மணியினை சூடிய
உனை கண்டு கண்களும் கலங்கிடுதே

லிங்கா லிங்கா லிங்கேஸ்வர பிராட்டீஸ்வரா
சிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா

லிங்கா லிங்கா லிங்கேஸ்வர பிராட்டீஸ்வரா
சிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா

பனிமலையில் இருப்பவா பார்வதியின் நாயகா
பக்தர்களை காப்பவா உருகுது என் மனம்
அடிமுடி தேவையில்லை உன் திருவடி போதுமய்யா
உலக மாந்தர் அனைவரிலும் என்றுமே நீயே நிறைஞானி

லிங்கா லிங்கா லிங்கேஸ்வர பிராட்டீஸ்வரா
சிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா

லிங்கா லிங்கா லிங்கேஸ்வர பிராட்டீஸ்வரா
சிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா

மார்க்கண்டேயனுக்கு மட்டும் தான் அருள் புரிவாயா
இந்த மாதவி மகளுக்கு அருள் புரிய மாட்டாயா
ஏர் உழுதிடும் உழவனுக்கு காட்சி தர கிழவனாக வர மாட்டாயா அமரர்களை காத்திட குமரனை தந்தவா

லிங்கா லிங்கா லிங்கேஸ்வர பிராட்டீஸ்வரா
சிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா

லிங்கா லிங்கா லிங்கேஸ்வர பிராட்டீஸ்வரா
சிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
அத்தனை ஜென்மமும் உன் மடியில்
வரம் தந்திடு இல்லையேல்
சாபமாவது தந்திடு சிவணே

லிங்கா லிங்கா லிங்கேஸ்வர பிராட்டீஸ்வரா
சிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா

லிங்கா லிங்கா லிங்கேஸ்வர பிராட்டீஸ்வரா
சிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா

பஞ்சபூத நாயகனே பரம்பொருளே
நெஞ்சம் எங்கும் நிறைந்தவா
கயிலைமலை வாசகனே
பிராட்டீஸ்வரா கிள்ளியூரின் நாயகனே

லிங்கா லிங்கா லிங்கேஸ்வர பிராட்டீஸ்வரா
சிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here