ஓம் என்னும் நாதத்திலே ஓங்காரம் நீயம்மா பாலவிளை பத்ரேஸ்வரி
ஓதுகின்ற நாமத்திலே ரீங்காரம் நீயம்மா பாலவிளை பத்ரேஸ்வரி
சிந்தையிலே உன்னை வைத்தேன் சிங்காரியே
குழந்தை உள்ளம் கொண்டவளே சங்கரியே
மரங்களும் உனை எட்டி பார்க்க முடியாது
காற்றை தூது விடுது
கடலும் உன் காலை எட்டி பிடிக்க முடியாது
அலை ஓசையை தூதுவிடுது
காற்றும் விடுது தூது ஓம் ஓம்
கடலும் விடுது தூது ஓம் ஓம்
காற்றும் விடுது தூது ஓம் ஓம்
கடலும் விடுது தூது ஓம் ஓம்
சிந்தையிலே உன்னை வைத்தேன் சிங்காரியே
குழந்தை உள்ளம் கொண்டவளே சங்கரியே
சிவம் எனும் மூன்றெழுத்திற்கு சக்தியே நீயம்மா
பரம் எனும் இடத்திற்கு நீயே மெய்யம்மா
சிவம் எனும் மூன்றெழுத்திற்கு சக்தியே நீயம்மா
பரம் எனும் இடத்திற்கு நீயே மெய்யம்மா
ஏறுமயில் வாகனனின் தாயம்மா
ஏங்குகிறேன் உன்னடிமை நானம்மா
ஏறுமயில் வாகனனின் தாயம்மா
ஏங்குகிறேன் உன்னடிமை நானம்மா
காற்றும் விடுது தூது ஓம் ஓம்
கடலும் விடுது தூது ஓம் ஓம்
மரங்களும் உனை எட்டி பார்க்க முடியாது
காற்றை தூது விடுது
கடலும் உன் காலை எட்டி பிடிக்க முடியாது
அலை ஓசையை தூதுவிடுது
சிந்தையிலே உன்னை வைத்தேன் சிங்காரியே
குழந்தை உள்ளம் கொண்டவளே சங்கரியே
சத்தியத்தை காப்பவளே நித்திய அருள் தருவாய்
தித்திக்க பேசுவேனே நித்தியம்
சத்தியத்தை காப்பவளே நித்திய அருள் தருவாய்
தித்திக்க பேசுவேனே நித்தியம்
மண்ணரசி தாயே விண்ணரசி நீயே
மண்ணும் விண்ணும் உனதே
மண்ணரசி தாயே விண்ணரசி நீயே
மண்ணும் விண்ணும் உனதே
காற்றும் விடுது தூது ஓம் ஓம்
கடலும் விடுது தூது ஓம் ஓம்
மரங்களும் உனை எட்டி பார்க்க முடியாது
காற்றை தூது விடுது
கடலும் உன் காலை எட்டி பிடிக்க முடியாது
அலை ஓசையை தூதுவிடுது
சிந்தையிலே உன்னை வைத்தேன் சிங்காரியே
குழந்தை உள்ளம் கொண்டவளே சங்கரியே
வண்ண கிளியே வாடாதமலரே
வண்டு நிற கூந்தல் உனதே
வண்ண கிளியே வாடாதமலரே
வண்டு நிற கூந்தல் உனதே
பாலவிளை அம்மா நீ என்றும் பூரண கலசம்
பாதுகாக்க வேணும் எந்தன் வாழையடி வம்சம்
பாலவிளை அம்மா நீ என்றும் பூரண கலசம்
பாதுகாக்க வேணும் எந்தன் வாழையடி வம்சம்
காற்றும் விடுது தூது ஓம் ஓம்
கடலும் விடுது தூது ஓம் ஓம்
மரங்களும் உனை எட்டி பார்க்க முடியாது
காற்றை தூது விடுது
கடலும் உன் காலை எட்டி பிடிக்க முடியாது
அலை ஓசையை தூதுவிடுது
சிந்தையிலே உன்னை வைத்தேன் சிங்காரியே
குழந்தை உள்ளம் கொண்டவளே சங்கரியே
ஓம் என்னும் நாதத்திலே ஓங்காரம் நீயம்மா பாலவிளை பத்ரேஸ்வரி
ஓதுகின்ற நாமத்திலே ரீங்காரம் நீயம்மா பாலவிளை பத்ரேஸ்வரி
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd