எட்டுதிக்கும் கேட்குது உன்புகழ் உன்புகழ்
பட்டிதொட்டி பாடுது உன்புகழ் உன்புகழ்
எட்டுதிக்கும் கேட்குது உன்புகழ் உன்புகழ்
பட்டிதொட்டி பாடுது உன்புகழ் உன்புகழ்
ஸர்வசக்தி நாயகியே ஸர்வமங்களம் தருவாய் பாலவிளை இசக்கி அம்மா
இச்சாசக்தி ரூபிணியே இனியவள் நீயே பாலவிளை இசக்கி அம்மா
ஜெய ஜெய சக்தி ஜகமாளுறா
ஜென்மங்கள் தோறும் உறவாடுறா
கோலம் என்னடி தாயே கோபம் வேண்டாம் தாயே
காலம் வந்ததடி தாயே நல்லகாலம் வந்ததடி தாயே
உருமாறி காக்கும் உனக்கு ஆயிரம் திருவுருவம்
தடம்மாறி போகாமல் காக்கணும் உன் மறுஉருவம்
ஜெய ஜெய சக்தி ஜகமாளுறா
ஜென்மங்கள் தோறும் உறவாடுறா
எட்டுதிக்கும் கேட்குது உன்புகழ் உன்புகழ்
பட்டிதொட்டி பாடுது உன்புகழ் உன்புகழ்
குழந்தை சத்தம் கேட்கையிலே குழந்தையம்மா நீ குழந்தையம்மா நீ மடந்தை என் சத்தம் கேட்கையிலே தாயம்மா நீ தாயம்மா நீ
ஆலமர அலங்காரத்தில் அரசாள்கிறாய் நீ அரசாள்கிறாய்
ஆண்டுதோறும் வந்திங்கே அருள்புரிகிறாய் நீ அருள்புரிகிறாய்
ஜெய ஜெய சக்தி ஜகமாளுறா
ஜென்மங்கள் தோறும் உறவாடுறா
எட்டுதிக்கும் கேட்குது உன்புகழ் உன்புகழ்
பட்டிதொட்டி பாடுது உன்புகழ் உன்புகழ்
தொட்டில் ஆடும் வீட்டிலிருந்து தொட்டில் பிள்ளை உனக்கு
மஞ்சபாலில் மனம் குளிர குளித்து களிப்பது விளையாட்டு உனக்கு
வேப்பிலையும் இனிக்குதம்மா வெந்நீரும் குளிருதம்மா
ஜெய ஜெய சக்தி ஜகமாளுறா
ஜென்மங்கள் தோறும் உறவாடுறா
எட்டுதிக்கும் கேட்குது உன்புகழ் உன்புகழ்
பட்டிதொட்டி பாடுது உன்புகழ் உன்புகழ்
ஸர்வசக்தி நாயகியே ஸர்வமங்களம் தருவாய் பாலவிளை இசக்கி அம்மா
இச்சாசக்தி ரூபிணியே இனியவள் நீயே பாலவிளை இசக்கி அம்மா
ஜெய ஜெய சக்தி ஜகமாளுறா
ஜென்மங்கள் தோறும் உறவாடுறா
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd