பாலவிளை தாயே பாதுகாக்கணும் நீயே
காலம் தாழ்த்த வேணாமே
பாசம் வைத்தேன் நானே வாச மல்லிகை சூடி
வரவேணும் அம்பிகையே
பால கணபதியும் வேலன் குமரனும் தவழ்ந்தனர் உன் மடியில்
காலம் முழுதும் நானும் வந்திட வேணும் உன் திருவடியில்
எல்லோருக்கும் அம்மா நீயே பத்ரேஸ்வரி
என்றைக்கும் அம்மா நீயே பாலவிளை பத்ரேஸ்வரி
எல்லோருக்கும் அம்மா நீயே பத்ரேஸ்வரி
என்றைக்கும் அம்மா நீயே பாலவிளை பத்ரேஸ்வரி
பாலவிளை தாயே பாதுகாக்கணும் நீயே
காலம் தாழ்த்த வேணாமே
பாசம் வைத்தேன் நானே வாச மல்லிகை சூடி
வரவேணும் அம்பிகையே
உன் உதட்டை கண்டால் என் உதடு புன்னகைக்குதம்மா
உன் கண்ணை கண்டால் என் புருவம் விரியுதம்மா
காலை ஒளியே கோலவிழியே வாழ்நாள் முழுதும் காவல் நீயே
தீப சுடரே தீரும் இடரே தீவின் கரையே கரை சேர்ப்பாய் எனையே
எல்லோருக்கும் அம்மா நீயே பத்ரேஸ்வரி
என்றைக்கும் அம்மா நீயே பாலவிளை பத்ரேஸ்வரி
எல்லோருக்கும் அம்மா நீயே பத்ரேஸ்வரி
என்றைக்கும் அம்மா நீயே பாலவிளை பத்ரேஸ்வரி
பாலவிளை தாயே பாதுகாக்கணும் நீயே
காலம் தாழ்த்த வேணாமே
பாசம் வைத்தேன் நானே வாச மல்லிகை சூடி
வரவேணும் அம்பிகையே
இதயம் எனது துடிப்பு உனது இரண்டும் சேர துடிக்குது
மூச்சு காற்றும் உன்னை அடைய முழுமூச்சாய் சுவாசிக்குது
ஒரு கை என் கண்ணீரை துடைக்க மறு கை கட்டி அணைக்க
என் இருகை உனை வணங்கி நிற்க பாக்கியம் தந்திடம்மா
எல்லோருக்கும் அம்மா நீயே பத்ரேஸ்வரி
என்றைக்கும் அம்மா நீயே பாலவிளை பத்ரேஸ்வரி
எல்லோருக்கும் அம்மா நீயே பத்ரேஸ்வரி
என்றைக்கும் அம்மா நீயே பாலவிளை பத்ரேஸ்வரி
பாலவிளை தாயே பாதுகாக்கணும் நீயே
காலம் தாழ்த்த வேணாமே
பாசம் வைத்தேன் நானே வாச மல்லிகை சூடி
வரவேணும் அம்பிகையே
அமிர்த கலசம் நிலையானது பூரண கும்பம் உனக்கானது
வானை முட்டும் கொடிமரமோ வாழ்வை மேலே கொண்டு போகுது
காற்றும் கடல் அலையும் உன் புகழை கவிபாடுது
உனை போற்றும் நாவெல்லாம் புவி ஆளுது
எல்லோருக்கும் அம்மா நீயே பத்ரேஸ்வரி
என்றைக்கும் அம்மா நீயே பாலவிளை பத்ரேஸ்வரி
எல்லோருக்கும் அம்மா நீயே பத்ரேஸ்வரி
என்றைக்கும் அம்மா நீயே பாலவிளை பத்ரேஸ்வரி
பாலவிளை தாயே பாதுகாக்கணும் நீயே
காலம் தாழ்த்த வேணாமே
பாசம் வைத்தேன் நானே வாச மல்லிகை சூடி
வரவேணும் அம்பிகையே
பால கணபதியும் வேலன் குமரனும் தவழ்ந்தனர் உன் மடியில்
காலம் முழுதும் நானும் வந்திட வேணும் உன் திருவடியில்
எல்லோருக்கும் அம்மா நீயே பத்ரேஸ்வரி
என்றைக்கும் அம்மா நீயே பாலவிளை பத்ரேஸ்வரி
எல்லோருக்கும் அம்மா நீயே பத்ரேஸ்வரி
என்றைக்கும் அம்மா நீயே பாலவிளை பத்ரேஸ்வரி
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd