Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

திரிசூலம் கையில் ஏந்தி சிவகாமி நாச்சியே.. பாடல்

திரிசூலம் கையில் ஏந்தி சிவகாமி நாச்சியேவண்ண சேலை கட்டிக்கிட்டு வா வா வாஎரிகின்ற அனல் தீயை என் நெஞ்சில் அணைத்திடவேவிரைந்து நீயும் இங்கே வா வா வா எங்கள் பரம்பரை சொத்தே பாலவிளை அம்மாஎங்கள்...
HomeSongsசலங்கை கட்டி ஆடிவரும் அழகிலே பாலவிளை ஊரிலே... பாடல்

சலங்கை கட்டி ஆடிவரும் அழகிலே பாலவிளை ஊரிலே… பாடல்

சலங்கை கட்டி ஆடிவரும் அழகிலே
சஞ்சலங்கள் தீருதம்மா பாரிலே
சிவப்பு சேலை கட்டி வரும் அழகிலே
வேதனைகள் தீருதம்மா பாலவிளை ஊரிலே
நல்ல மூக்குத்தி மின்னுகின்ற அழகிலே
நல்லதே நடக்குதம்மா நாட்டிலே

சிலுசிலுக்குது சிலுசிலுக்குது சிலுசிலுக்குதம்மா நீ
சிங்கம் மீது ஏறிவர மேனியெல்லாம் சிலுசிலுக்குதம்மா

மணியோசை மணியோசை ஒலிக்கையிலே
மணியாச்சி மணியாச்சி மனம் துடிக்கையிலே
காலிரண்டும் காலிரண்டும் நடக்கயிலே
காலடியை நாடி வந்தேன் தொழுதிடவே

சிலுசிலுக்குது சிலுசிலுக்குது சிலுசிலுக்குதம்மா நீ
சிங்கம் மீது ஏறிவர மேனியெல்லாம் சிலுசிலுக்குதம்மா

சலங்கை கட்டி ஆடிவரும் அழகிலே
சஞ்சலங்கள் தீருதம்மா பாரிலே
சிவப்பு சேலை கட்டி வரும் அழகிலே
வேதனைகள் தீருதம்மா பாலவிளை ஊரிலே
நல்ல மூக்குத்தி மின்னுகின்ற அழகிலே
நல்லதே நடக்குதம்மா நாட்டிலே

வாடாத செவ்வந்தி வாசல் வரை மணக்கையிலே
தேயாத பௌர்ணமியாய் அகம் ஜொலிக்கையிலே
ஓயாது ஓயாது சொல்லயிலே தீராத வினையெல்லாம்
ஓடிடுது ஓடிடுது உன் கண் அசைவினிலே

சிலுசிலுக்குது சிலுசிலுக்குது சிலுசிலுக்குதம்மா நீ
சிங்கம் மீது ஏறிவர மேனியெல்லாம் சிலுசிலுக்குதம்மா

சலங்கை கட்டி ஆடிவரும் அழகிலே
சஞ்சலங்கள் தீருதம்மா பாரிலே
சிவப்பு சேலை கட்டி வரும் அழகிலே
வேதனைகள் தீருதம்மா பாலவிளை ஊரிலே
நல்ல மூக்குத்தி மின்னுகின்ற அழகிலே
நல்லதே நடக்குதம்மா நாட்டிலே

சிலுசிலுக்குது சிலுசிலுக்குது சிலுசிலுக்குதம்மா நீ
சிங்கம் மீது ஏறிவர மேனியெல்லாம் சிலுசிலுக்குதம்மா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here